மகளிர் சுய உதவிக்குழுவினர் தயாரிக்கும் பொருட்களை ஒரே இடத்தில் விற்பனை செய்ய மையம் திறப்பு : முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மகளிர் குழுவினர் நன்றி

மகளிர் சுய உதவிக்குழுவினர் தயாரிக்கும் பொருட்களை ஒரே இடத்தில் விற்பனை செய்ய மையம் திறப்பு : முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மகளிர் குழுவினர் நன்றி

ஞாயிறு, பெப்ரவரி 14,2016,

தூத்துக்குடியில், மகளிர் சுய உதவிக்குழுவினர் தயாரிக்கும் பொருட்களை ஒரே இடத்தில் சந்தைப்படுத்தும் வகையில் விற்பனை மையம் திறக்கப்பட்டுள்ளது. இதற்காக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, மகளிர் குழுவினர் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

தமிழகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களால், சுய தொழிலில் ஈடுபட்டு வருவாய் ஈட்டி வருகின்றனர். அந்த வகையில், தூத்துக்குடி மாநகராட்சியின்கீழ் செயல்பட்டுவரும் மகளிர் சுய உதவிக்குழுவினர் தயாரிக்கும் பொருட்களை ஒரே இடத்தில் சந்தைப்படுத்தி, விற்பனை செய்ய குருஸ்புரத்தில் விற்பனை மையம் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மேயர் அந்தோணி கிரேசி உள்ளிட்டோர் பங்கேற்றனர். முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.