மகளிர் தினத்தையொட்டி,தமிழக அரசு சார்பில் அவ்வையார் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை

மகளிர் தினத்தையொட்டி,தமிழக அரசு சார்பில் அவ்வையார் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை

புதன், மார்ச் 09,2016,

உலக மகளிர் தினத்தையொட்டி, தமிழக அரசு சார்பில் சென்னையில் இன்று, அவ்வையார் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

உலக மகளிர் தினத்தையொட்டி, சென்னை காமராஜர் சாலையில் உள்ள தமிழ் மூதாட்டி அவ்வையாரின் திருவுருவச் சிலைக்கு அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு தமிழக அரசின் சார்பில் இன்று மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் திரு. த. உதயச்சந்திரன், தமிழ் வளர்ச்சி துறை இயக்குனர் முனைவர் கா.மு.சேகர், உலகத் தமிழாராய்ச்சி இயக்குனர் முனைவர் கோ. விசயராகவன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் இதில் கலந்து கொண்டனர்.