மகாமகப் பெருவிழாவில் துப்புறவுப் பணியில் ஈடுபட்ட 1,400 ஊழியர்களுக்கு, தலா 2,000 ரூபாய் ஊக்கப்பரிசு : முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு ஊழியர்கள் நன்றி

மகாமகப் பெருவிழாவில் துப்புறவுப் பணியில் ஈடுபட்ட 1,400 ஊழியர்களுக்கு, தலா 2,000 ரூபாய் ஊக்கப்பரிசு : முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு ஊழியர்கள் நன்றி

புதன், பெப்ரவரி 24,2016,

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, கும்பகோணம் மகாமகப் பெருவிழாவில் துப்புறவு பணிகளை மேற்கொண்ட பல்வேறு நகராட்சி பணியாளர்கள் ஆயிரத்து 400 பேருக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் வீதம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. சிறப்பு பரிசு பெற்றுக் கொண்ட துப்புறவு ஊழியர்கள் முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர். 

உலக பிரசித்திபெற்ற கும்பகோணம் மகாமகப் பெருவிழா, கடந்த 13-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, புனித நீராடி ஆலய தரிசனம் மேற்கொண்டனர். 10 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற இந்த பெருவிழாவில், கலந்து கொண்ட லட்சக்கணக்கான பக்தர்களின் சுகாதாரத்தை பேணும் வகையில், பல்வேறு நகராட்சிகளில் இருந்து ஆயிரத்து 400 துப்புறவு பணியாளர்கள் கும்பகோணத்திற்கு வரவழைக்கப்பட்டு, துப்புறவு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 

மகாமகப் பெருவிழா கடந்த 22-ம் தேதியுடன் முடிவடைந்ததையடுத்து, துப்புறவு பணியில் ஈடுபட்ட அனைத்து ஊழியர்களுக்கும் தலா 2 ஆயிரம் ரூபாய் வீதம் ஊக்கப்பரிசு வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். அதனைத்தொடர்ந்து, கும்பகோணத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆயிரத்து 400 துப்புறவு ஊழியர்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய், புத்தாடைகள் மற்றும் நினைவு பரிசுகளை நகர்மன்ற தலைவர் திருமதி. ரத்னா சேகர் வழங்கினார். சிறப்பு பரிசுகளை பெற்றுக் கொண்ட துப்புறவு பணியாளர்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நெஞ்சம் நெகிழ நன்றி தெரிவித்தனர்.