மக்களின் பிரார்த்தனைகளால் முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைந்து அரசியல் பணிகளை தொடர்வார் ; அதிமுக செய்தித் தாெடர்பாளர் பொன்னையன்

மக்களின் பிரார்த்தனைகளால் முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைந்து அரசியல் பணிகளை தொடர்வார் ; அதிமுக செய்தித் தாெடர்பாளர் பொன்னையன்

புதன், நவம்பர் 02,2016,

மக்களின் பிரார்த்தனைகளால் முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைந்து அரசியல் பணிகளை தொடர்வார் என அதிமுக செய்தித் தாெடர்பாளர் பொன்னையன் கூறியுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா நலம் பெற வேண்டி அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் பல்வேறு சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்குள் ஜெயலலிதா சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் சென்னை அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதிமுக செய்தித் தொடர்பாளர் பொன்னையன், மக்களின் பிரார்த்தனைகளால் முதல்வர் விரைவில் குணமடைந்து அரசியல் பணிகளை தொடர்வார். முதல்வருக்கு பிசியோ தெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும் மக்களின் பிரார்த்தனைகளால் விரைவில் குணமடைந்து அரசியல் பணிகளை தொடர்வார் எனவும் கூறினார் பொன்னையன்.

மேலும், முதல்வர் உடல் நலம் பற்றிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள “அம்மா நலமுடன் இருக்கிறார்”  இந்த லிங்கை கிளிக் செய்யவும்.