மக்கள்நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார் முதலமைச்சர் ஜெயலலிதா:ஆளுநர் ரோசய்யா பாராட்டு

மக்கள்நலத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார் முதலமைச்சர் ஜெயலலிதா:ஆளுநர் ரோசய்யா பாராட்டு

புதன், ஜனவரி 20,2016,

முதலமைச்சர் ஜெயலலிதாவின் செயல்திறமிக்க சீரிய தலைமையின்கீழ், பல்வேறு சமூக, பொருளாதார வளர்ச்சித் திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றும், அவற்றின்மூலம் மக்கள்நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்றும், ஆளுநர் டாக்டர் கே. ரோசய்யா சட்டப்பேரவையில் பாராட்டினார்.

தமிழக சட்டப்பேரவையின், 2016-ம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் இன்று மரபுப்படி ஆளுநர் உரையுடன் தொடங்கியது.

முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு, சமூக நலத்திட்டங்களை ஆக்கபூர்வமாக செயல்படுத்துவதன் மூலம், சமூக சமத்துவத்தை ஏற்படுத்தி, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை குறைத்து, கல்வி, சுகாதாரம், வறுமை ஒழிப்பு, சமூக பாதுகாப்பு போன்ற மனித ஆற்றலை மேம்படுத்துவதற்கு காரணமாக உள்ளது என்றும் ஆளுநர் குறிப்பிட்டார். மக்களின் இல்லங்களுக்கே சென்று சேவை வழங்கும் வகையில், முதலமைச்சர் ஜெயலலிதா அறிமுகப்படுத்தியுள்ள, அம்மா திட்டங்கள் மற்றும் கிராமங்களுக்கு இ-சேவையைக் கொண்டு செல்லும் புரட்சிகரமான திட்டங்கள் குறிப்பிடத்தக்கன – பட்டாக்களை விரைந்து மாற்றித்தரும் திட்டங்கள்- சிறு, குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், ஆடு, மாடு வழங்கும் திட்டங்கள்- 593 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் ஆவின் பால் திட்டங்கள்- நியாயவிலைக் கடைகள் மூலம் சுமார் 2 கோடி குடும்பங்களுக்கு விலையில்லா அரிசி வழங்கும் திட்டம்- மானிய விலையில் பருப்பு வகைகள், எண்ணெய், கோதுமை, சர்க்கரை, மண்ணெண்ணெய் வழங்கும் திட்டங்கள் போன்றவை, முதலமைச்சருக்கு பெரும் பெயர் பெற்றுத்தரக்கூடியவை என்றும் ஆளுநர் பாராட்டு தெரிவித்தார்.