மக்கள் தெய்வமாகப் போற்றும் அம்மாவை குறைசொல்ல ஸ்டாலினுக்கு எந்தத் தகுதியும் இல்லை : அ.தி.மு.க நிர்வாகிகள் பொதுமக்கள் கடும் கண்டனம்

மக்கள் தெய்வமாகப் போற்றும் அம்மாவை குறைசொல்ல ஸ்டாலினுக்கு எந்தத் தகுதியும் இல்லை : அ.தி.மு.க நிர்வாகிகள் பொதுமக்கள் கடும் கண்டனம்

திங்கட்கிழமை, பிப்ரவரி 27, 2017,

குற்றவாளிகளையே கொண்டு தி.மு.க.வை நடத்தும் மு.க.ஸ்டாலின், தமிழர்கள் தெய்வமாகப் போற்றும் அம்மாவை குறைசொல்ல எந்தத் தகுதியும் இல்லை என அ.இ.அ.தி.மு.க நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழக மக்கள், தெய்வமாகப் போற்றும், மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவை குறைசொல்ல, குற்றவாளிகளைக் கொண்டு தி.மு.க.வை நடத்தும் மு.க.ஸ்டாலினுக்கு எந்தத் தகுதியும் இல்லை என, அ.இ.அ.தி.மு.க நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.தி.மு.க.வினர் பற்றி நாட்டு மக்களுக்கும் நன்கு தெரியும் என்றும் கழக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

மறைந்த மாண்புமிகு அம்மாவின் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் அம்மாவின் பிறந்த தினத்தை அரசு விழாவாக கொண்டாடக் கூடாது என மு.க.ஸ்டாலின் கூறும் குற்றச்சாட்டுக்கு பொதுமக்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.