மக்கள் நலனுக்காக மெழுகுவர்த்தியாக தன்னை உருக்கி தியாகம் செய்தவர் பெருந்தலைவர் காமராஜர் : ஓ.பன்னீர்செல்வம்

மக்கள் நலனுக்காக மெழுகுவர்த்தியாக தன்னை உருக்கி தியாகம் செய்தவர் பெருந்தலைவர் காமராஜர் : ஓ.பன்னீர்செல்வம்

ஜூலை ,16 ,2017 ,ஞாயிற்றுக்கிழமை, 

விருதுநகர் : விருதுநகர் கே.வி.எஸ்.பள்ளி வளாகத்தில் நாடார் மகாஜன சங்கம் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளையொட்டி கல்வித்திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார்.நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ் தலைமை தாங்கினார். 

விழாவில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-

மக்கள் பிரச்சினையை தேசிய பிரச்சினையாக கருதி அவற்றுக்கு தீர்வு கண்டவர் காமராஜர். மக்கள் நலனுக்காக மெழுகுவர்த்தியாக தன்னை உருக்கி தியாகம் செய்தவர். அதனால் தான் அவரது புகழ் என்றென்றும் நிலைத்து இருக்கிறது. நாட்டு மக்களின் நெஞ்சத்தில் அவர் நீங்கா இடம் பெற்றுவிட்டார்.

பெருந்தலைவர் காமராஜர் பசியின் கொடுமையை உணர்ந்தவர். ஏழை, எளிய மக்களின் பசிப்பிணியை போக்கியவர். அரசு அதிகாரிகள் அவரை படிக்காத மேதை என்று பாராட்டும் வகையில் ஆட்சி செய்தார். கல்வி மட்டும் அல்லாமல் அனைத்து துறைகளின் வளர்ச்சியிலும் முத்திரை பதித்தவர். பெருந்தலைவர் காமராஜரின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும் என்று பேசினார்.