மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு:22,852 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி கிடைத்துள்ளதால் முதலமைச்சருக்கு விவசாயிகள் நெஞ்சார்ந்த நன்றி

மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு:22,852 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி கிடைத்துள்ளதால் முதலமைச்சருக்கு விவசாயிகள் நெஞ்சார்ந்த நன்றி

ஞாயிறு, டிசம்பர் 27,2015,

முதலைமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைக்கேற்ப மணிமுத்தாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் அடங்கிய 22,852 ஏக்கர் நிலங்களுக்கு, பாசன வசதி கிடைத்துள்ளதால், மகிழ்ச்சியடைந்துள்ள விவசாயிகள், முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.

முதலைமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைக்கேற்ப திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மணிமுத்தாறு பிரதான கால்வாயில் 1 , 2, 3 மற்றும் 4வது பிரிவு பாசன நிலங்களுக்கு பிசான பருவ சாகுபடிக்கு கலெக்டர் மு.கருணாகரன் தலைமையில், விஜிலா சத்தியானந்த் எம்.பி, கே.ஆர்.பி பிரபாகரன் எம்.பி., தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவர் ஆர்,முருகையா பாண்டியன் ஆகியோர் முன்னிலையில் மணிமுத்தாறு அணையிலிருந்து (25–12-2015) தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

பின்னர் கலெக்டர் மு.கருணாகரன் செய்தியாளரிடம் பேசுகையில், முதலைமைச்சர் ஜெயலலிதாவின் ஆணைக்கேற்ப, மணிமுத்தாறு அணையிலிருந்து திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், நான்குநேரி, பாளையங்கோட்டை, ராதாபுரம் உள்ளடக்கிய வட்டங்கள் மற்றும் கிராமங்களும் தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், சாத்தான்குளம் உள்ளடக்கிய வட்டங்கள் மற்றும் கிராமங்களும் பயன்பெறும் வகையில் மொத்தம் 22 ஆயிரத்து 852 ஏக்கர் பாசன நிலங்களுக்கு பிசான பருவ சாகுபடிக்காக  25–12-2015 முதல் 31-3-2016 வரை 98 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. விவசாய பெருமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி விவசாயம் செய்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு கலெக்டர் மு.கருணாகரன் தெரிவித்தார்.

மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டிருப்பதன் மூலம், திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம், நாங்குநேரி, திருநெல்வேலி, பாளையங்கோட்டை, ராதாபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம் மற்றும் சாத்தான்குளம் ஆகிய வட்டங்களில் அடங்கிய 22,852 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி கிடைத்துள்ளது. இதனால் மகிழ்ச்சியடைந்துள்ள விவசாயிகள், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்.