மத்திய அரசு கொண்டு வரும் தேர்வுகளை சமாளிக்கும் வகையில் கல்வித்தரம் உயர்த்தப்படும் : அமைச்சர் செங்கோட்டையன்

மத்திய அரசு கொண்டு வரும் தேர்வுகளை சமாளிக்கும் வகையில் கல்வித்தரம் உயர்த்தப்படும் : அமைச்சர் செங்கோட்டையன்

ஜூன் ,26 ,2017 ,திங்கட்கிழமை, 

கோபி : மத்திய அரசு கொண்டு வரும் அனைத்து  பொதுத்தேர்வுகளையும்  சமாளிக்கும் வகையில் கல்வித்தரம் மேம்படுத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

நேற்று கோபி வந்த பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அங்கு பல்வேறு அரசு நலத்திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். அப்போது அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது.-

மத்திய அரசு கொண்டு வரும் அனைத்து பொது தேர்வுகளையும் சமாளிக்கும் வகையில் கல்வித்தரத்தை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்காக கேள்வி தாள் அடங்கிய 54 ஆயிரம் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும். நீட் தேர்வு குறித்து அழுத்தம் தரும் அரசாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது என்று  கூறினார்.