மயிலாப்பூர் தொகுதி எம்எல்ஏ ஆர்.நடராஜூக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

மயிலாப்பூர் தொகுதி எம்எல்ஏ ஆர்.நடராஜூக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

வியாழக்கிழமை, பிப்ரவரி 23, 2017,

சென்னை : மயிலாப்பூர் தொகுதியில் குறைகள் கேட்க சென்ற எம்எல்ஏ ஆர்.நடராஜூக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

முன்னாள் முதலமைச்சர் பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்த நடராஜ் தனது தொகுதிக்குட்பட்ட பிஎம் தர்கா, லாயிட்ஸ் காலனி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் சந்தித்து குறைகள் கேட்டறிந்தார். அப்போது மயிலாப்பூர் தொகுதி பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எம்எல்ஏ ஆர்.நடராஜூ, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் தொகுதிகளுக்கு செல்ல வேண்டும் என கேட்டுக்கொண்டார்