மருத்துவக் கல்வியில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக ஆங்கில நாளிதழ் பாராட்டு

மருத்துவக் கல்வியில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக ஆங்கில நாளிதழ் பாராட்டு

வெள்ளி, பெப்ரவரி 19,2016,

மருத்துவக் கல்வியில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக DT Next ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 20 மருத்துவக்கல்லூரிகள் உள்ளதாகவும், வேறு எந்த மாநிலத்திலும் இந்த அளவு மருத்துவக் கல்லூரிகள் இல்லையென்றும் அந்நாளேடு புகழாரம் சூட்டியுள்ளது.

DT Next ஆங்கில நாளிதழ் இன்று வெளியிட்டுள்ள சிறப்புச் செய்தியில், இந்தியாவில் ஆயிரம் பேருக்கு, ஒன்றுக்கும் குறைவான விகிதாச்சாரத்தில் மருத்துவர் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் மற்றும் உலக வங்கி ஆகியவை தெரிவித்துள்ளபோதிலும், தமிழ்நாட்டில் இதைவிட கூடுதலாகவே மருத்துவர்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மருத்துவக் கல்வியில், தமிழகம்தான் நாட்டிலேயே முதலிடத்தில் இருப்பதாகவும் இந்நாளேடு புகழாரம் சூட்டியுள்ளது.

தமிழ்நாட்டில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பதிவு பெற்ற மருத்துவர்கள் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தமிழகத்தில் 20 மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருவதாகவும், வேறு எந்த மாநிலத்திலும் இத்தனை மருத்துவக் கல்லூரிகள் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ள இந்நாளேடு, மேலும் 3 மருத்துவ கல்லுரிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகள் அதிகம் இருப்பதால், சுகாதார சூழ்நிலையைப் பொறுத்தவரை தமிழகம் முன்னணியில் இருப்பதாகவும் இந்நாளேடு புள்ளிவிபர ஆதாரங்களுடன் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் எய்ட்ஸ் நோய்க்கு சிகிச்சை அளிக்கும் 52 மையங்கள் உள்ளதாகவும், இவற்றின்மூலம் 85,155 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, தமிழகம் நாட்டிலேயே இத்துறையில் 2-வது இடம் வகிப்பதாகவும் அந்த நாளேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.