மருத்துவ துறை மேம்பாட்டிற்கு முதலமைச்சர் ஜெயலலிதா மிகப்பெரிய ஊக்கத்தை வழங்கி வருகிறார்:மருத்துவத்துறை நிபுணர்கள் பாராட்டு

மருத்துவ துறை மேம்பாட்டிற்கு முதலமைச்சர் ஜெயலலிதா மிகப்பெரிய ஊக்கத்தை வழங்கி வருகிறார்:மருத்துவத்துறை நிபுணர்கள் பாராட்டு

புதன்கிழமை, ஜனவரி 27, 2016,

முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு, சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு அளித்துள்ள உதவிகளும், அங்கீகாரமும்தான், மத்திய அரசின் பத்ம விபூஷண் விருது கிடைப்பதற்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அமைந்தன என்று, புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் V. சாந்தா தெரிவித்துள்ளார்.

குடியரசு தினத்தையொட்டி, மத்திய அரசு சார்பில் பத்ம விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களில், சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் V. சாந்தாவுக்கு, பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுக்கு நன்றி தெரிவித்துக்கொண்ட டாக்டர் சாந்தா, முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு, தனது சேவையைப் பாராட்டி விருதுகள் வழங்கியதோடு, அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் மேம்பாட்டுக்காக, பல கோடி ரூபாய் நிதியுதவி வழங்கி, தொடர்ந்து ஊக்கமளித்து வருவதாகத் தெரிவித்தார்.

பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் T.S. சந்திரசேகர், கடந்த 2012-ம் ஆண்டு தமிழக அரசு, தனக்கு விருது வழங்கி கவுரவித்தது குறித்து, நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார். மேலும், முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு, மருத்துவத்துறையில் பல்வேறு மகத்தான சாதனைகளைப் படைத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.