மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி மலர் வளையம் வைத்து மரியாதை

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி மலர் வளையம் வைத்து மரியாதை

ஜூலை ,31 ,2017 , திங்கட்கிழமை,

சென்னை : மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

ஜி.எஸ்.டி. குறித்த கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்த அருண் ஜேட்லி, அடையாறில் நடைபெற்ற தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோருக்கான கருத்தரங்கில் பங்கேற்றார். இதையடுத்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட மெரினா கடற்கரைக்குச் சென்ற அவர், ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.