மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் ஜெயலலிதா திருவுருவச்சிலை

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் ஜெயலலிதா திருவுருவச்சிலை

திங்கள் , டிசம்பர் 19,2016,

சென்னை ; மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரினா கடற் கரையில் உள்ள எம்.ஜி. ஆர் நினைவிடத்தில் கடந்த 6-ந்தேதி அடக்கம் செய்யப் பட்டது.அதையடுத்து  தினமும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சமாதியில் அ.தி.மு.க. தொண்டர்களும், பொது மக்களும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பிற மாவட் டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக் கணக்கானவர்கள் வந்து அஞ்சலி செலுத்துகிறார்கள்.

இதனால் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சமாதியில் எப்போதும் மக்கள் கூட்டமாக காணப்படுகிறது.மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மீது தீவிர விசுவாசம் கொண்ட தொண்டர்கள்  சமாதியில் மொட்டை அடித்து அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர். சமாதிக்கு வரும் பெண்கள் பெரும்பாலானோர் ஜெயலலிதா மறைவை தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு கதறி அழுகிறார்கள்.இதேபோல் இன்றும் ஏராளமான பொதுமக்கள் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சமாதியை பார்வையிட்டு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சமாதியில் இன்று அவரது உருவச் சிலை வைக்கப்பட்டிருந்தது. இந்த சிலையை மீஞ்சூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் முத்துக்குமார் வைத்துள்ளார்.

இந்த சிலை ஆந்திராவில் செய்யப்பட்டது. பைபர் மூலம் இந்த சிலை உருவாக் கப்பட்டுள்ளது. ஆந்திராவில் இருந்து வரவழைக்கப்பட்ட இந்த உருவச் சிலை மெரினா நினைவிடத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப் படத்தின் அருகே வைக்கப்பட்டுள்ளது.