மறைந்த முதல்வர் அம்மாவின் 69-வது பிறந்த நாள் : தமிழகம் முழுவதும் ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி அதிமுக வினர் உற்சாக கொண்டாட்டம்

மறைந்த முதல்வர் அம்மாவின் 69-வது பிறந்த நாள் : தமிழகம் முழுவதும் ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி அதிமுக வினர் உற்சாக கொண்டாட்டம்

சனிக்கிழமை, பிப்ரவரி 25, 2017,

மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவின் 69-வது பிறந்தநாளை முன்னிட்டு, மாவட்டந்தோறும் கழக நிர்வாகிகள் மாண்புமிகு அம்மாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியும் ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், அம்மா பிறந்தநாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் 690 மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளன. இதில், முதல் நிகழ்ச்சியாக சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில், அமைச்சர்கள் திரு. D. ஜெயக்குமார், டாக்டர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மருத்துவமுகாமை துவக்கி வைத்தனர். இதேபோல், வட சென்னை தெற்கு மாவட்டக் கழகம் சார்பில், ராயபுரத்தில் உள்ள R.S.R.M. அரசு மகப்பேறு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை அமைச்சர்கள் வழங்கினர்.

வடசென்னை தெற்கு மாவட்டக் கழகம் சார்பில், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வாயிலில், அம்மா பிறந்தநாளை முன்னிட்டு, ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், அமைச்சர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தென் சென்னை வடக்கு மாவட்டம் சார்பில் 36 வார்டுகளில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி கொண்டாடப்பட்டது.

தென்சென்னை தெற்கு மாவட்ட சைதை தொகுதி 139-வது வடக்கு வட்ட கழக சார்பில் மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து அன்னதானம், இலவச வேட்டி, சேலை உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன.

வழக்கறிஞர் பிரிவு சார்பில், சென்னை உயர்நீதிமன்ற வாயிலில், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் திரு. நவநீதகிருஷ்ணன் தலைமையில் கழக நிர்வாகிகள் ஏழைகளுக்கு அன்னதானம் மற்றும் பெண்களுக்கு சேலைகள் வழங்கப்பட்டன.

திருவள்ளுர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் பார்வையற்ற மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.கே.ஏ.செங்கோட்டையன் மதிய உணவு வழங்கினார். தொடர்ந்து, அன்னதானம் வழங்கியும், தையல் இயந்திரங்கள், விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பெண்கள் 6ஆயிரம் பேருக்கு புடவைகள் வழங்கப்பட்டது.

தாம்பரம் தொகுதிக்கழகம சார்பில் முத்துரங்கம் பூங்கா அருகே மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து அனாதை இல்லத்தில் தங்கி பயிலும் மாணவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்து.

ராமநாதபுரம் மாவட்ட கழகம் சார்பில் அரண்மனையின் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த, மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டதோடு ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தருமபுரி மண்டல போக்குவரத்துக்கழக அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

தூத்துக்குடி மாவட்ட கழகம் சார்பில் தொழுநோயாளிகள் காப்பகம் மற்றும் மாற்றுதிறனாளிகள் காப்பகத்தில் உள்ளவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் பழைய பேருந்துநிலையம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவின் திருவுருவ படத்திற்கு கழகத்தினர் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினர்.

சேலம் அரசு மருத்துவமனையில், இன்று காலை பிறந்த 5 குழந்தைகளுக்கு, மாவட்ட கழகம் சார்பில் தங்க செயின், தங்க மோதிரம், கால் கொலுசு வழங்கப்பட்டன. இதில் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

சேலம் மாநகர் மாவட்ட கழகம் சார்பில் மாநகர் முழுவதும் பல்வேறு இடங்களில் மறைந்த மாண்புமிகு முதலமைச்சரின் படத்திற்கு மலர் தூவியும், கேக் வெட்டியும், ஏழை எளியவர்களுக்கு உணவு வழங்கியும், கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்தும் கொண்டாடினர்.

ஆத்தூர், அயோத்திபட்டணம், பத்திரகவுண்டன் பாளையம், எத்தாப்பூர் மஞ்சினி உள்ளிட்ட பகுதிகளில் கழகத்தினர் சார்பில் மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவின் அலங்கரிக்கப்பட்ட படத்திற்கு மலர்தூவி மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கப்பட்டன.

மதுரை புறநகர் மாவட்ட கழகம் சார்பில் திருப்பரங்குன்றம் பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்ட மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

மதுரை மாநகர் மாவட்ட கழகம் சார்பில் கழக அலுவலகம் முன்பு அலங்கரித்து வைக்கப்பட்ட மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில், நகரக்கழகம் சார்பில் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

பழனி அடுத்த நெய்க்காரபட்டி பேருந்து நிலையம் முன்பு, மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

திண்டுக்கல் மாவட்ட கழகம் சார்பில் மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் திருவுருவப்படத்திற்கு கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். முன்னதாக கழக நிர்வாகிகள் சாபில் திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது.

இதேபோன்று திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகேயுள்ள ஆதரவற்ற சிறுமிகள் இல்லத்தில் உள்ள சிறுமிகளுக்கு கழக நிர்வாகிகள் சார்பில் காலை உணவு வழங்கப்பட்டது. மேலும் பல நலத்திட்ட உதவிகளும் செய்யப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் மத்திய பேருந்து நிலையம் முன்பு, வடக்கு மாவட்டக்கழகம் சார்பில், அம்மாவின் 69-வது பிறந்தநாளை முன்னிட்டு மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கழகம் சார்பில் கழக தெற்கு மாவட்ட அலுவலகம் மற்றும் தேரடி வீதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மறைந்த மாண்புமிகு முதமைச்சர் அம்மாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழகம் சார்பில் செய்யார் நகரில் உளள தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த மாண்புமிகு அம்மாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு கழக நிர்வாகிகள் அன்னாதானம் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட இளைஞர்-இளம்பெண்கள் பாசறை சார்பில், மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்மாவின் திருவுருவப் படத்திற்கு கழக நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன.

கன்னியாகுமரிமாவட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்டக்கழக அலுவலகத்தில், அம்மாவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், சேந்தமங்கலம், குமாரபாளையம், ராசிபுரம், திருச்செங்கோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், அம்மாவின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டதுடன், இனிப்புகள் மற்றும் ஏழை-எளியோருக்கு அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

திருச்சி மாநகர் மற்றும் புறநகர் கழகத்தினர் சார்பில் மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். ஆயிரத்து 69 பெண்களுக்கு சேலைகள் வழங்கப்பட்டன.

சிவகங்கை மாவட்ட கழகம் சார்பில் தேவகோட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் ஆயிரத்து 69 மாணவிகளுக்கு ஆங்கில தமிழ் அகராதி வழங்கப்பட்டது.

அரியலூர் மாவட்ட கழகம் சார்பில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. கழக நிர்வாகத்தினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர்மாவட்ட அ.இ.அ.தி.மு.க சார்பில், அம்மாவின் பிறந்தநாளையொட்டி 5 ஆயிரம் பேருக்கு அறுசுவை உணவு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நாடாளுமன்ற-சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

மாண்புமிகு அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு, கும்பகோணம் செக்காங்கண்ணியில், அம்மா மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் ஏழை-எளிய மக்களுக்கு உடல் பரிசோதனைகளும், காப்பீட்டுத் தொகைகளும் வழங்கப்பட்டன. கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை சார்பில் நடைபெற்ற முகாமில், பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

கும்பகோணத்தில் எம்.ஜி.ஆர். இளைஞரணி சார்பில் நடைபெற்ற அம்மா பிறந்தநாள் விழாவில், 69 பேர் ரத்த தானம் வழங்கினர். பெண்களுக்கு சேலைகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

கும்பகோணம் பகுதிகளில் தஞ்சை மாவட்ட கழகம் மற்றும், போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கம் சார்பில் தொழு நோயாளிகளுக்கு அறுசுவை விருந்து வழங்கப்பட்டது. அம்மாவின் ஆன்மா சாந்தியடைய தொழு நோயாளிகள் உருக்கமாக பிராத்த்தனை செய்தனர்.

நெல்லை மாநகர் மாவட்ட கழக சார்பில் பாளையங்கோட்டை பிஷப் சார்ஜண்ட் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. இதில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்ற பகுதியில் அ.இ.அ.தி.மு.க சார்பில் அம்மாவின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதேபோல் ராதாபுரம் சுகாதாரத்துறை சார்பில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.

திருப்பூர் புறநகர் மாவட்ட கழகம் சார்பில் உடுமலையில் உள்ள உண்டு உறைவிட பள்ளியில் அம்மாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

கரூர் மாவட்ட கழகம் சார்பில் அம்மாவின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தியதோடு, கழக கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

கடலூர் கிழக்கு மாவட்டம் சார்பில் மஞ்சக்குப்பத்தில் அம்மாவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்தும், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கியும் கொண்டாடினர்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அன்பகம் மாற்றுத்திறனாளிகள் இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு உணவு உள்ளிட்ட பொருட்கள் கழகத்தினர் சார்பில் வழங்கப்பட்டன. தொடர்ந்து, இரண்டு கைகளும் இல்லாத மாற்றுத்திறனாளி மாணவி ஒருவர் சாகசம் செய்து கரகாட்ட நிகழ்ச்சி செய்து காட்டினார்.

கோவை மாநகர் மற்றும் புறநகர் அ.இ.அ.தி.மு.க.சார்பில் மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், ஏழை எளியவர்களுக்கு நலத்திட்டங்களும் வழங்கப்பட்டன.

இதேபோல், தமிழகம் முழுவதும் மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவின் பிறந்தநாள் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.