மறைந்த முதல்வர் அம்மா செயல்படுத்திய திட்டங்களால் கல்வித்துறையில் தமிழகம் முதலிடம் ; அமைச்சர் க.பாண்டியராஜன் தகவல்

மறைந்த முதல்வர் அம்மா செயல்படுத்திய திட்டங்களால் கல்வித்துறையில் தமிழகம் முதலிடம் ; அமைச்சர் க.பாண்டியராஜன் தகவல்

ஞாயிறு, பிப்ரவரி 05, 2017,

சென்னை ; மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா செயல்படுத்திய திட்டங்களின் விளைவாக, பள்ளிக்கல்வித்துறையில், தமிழகம் முதலிடம் பெற்று விளங்குவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.க.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று  நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.க.பாண்டியராஜன் கலந்துகொண்டு பேசினார். கல்வி மேம்பாட்டுக்கென மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா, 3 ஆயிரத்து 155 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 16 திட்டங்களை நிறைவேற்றியதாகவும், இதன் விளைவாக தமிழகம் பள்ளிக் கல்வித்துறையில் சாதனை புரிந்துள்ளதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார். மேலும், மாணவர்களை சிறந்த விளையாட்டு வீரர்களாக உருவாக்குவதற்காக 2 ஆயிரத்து 325 பேர் தேர்வு செய்யப்பட்டு, தலா 12 ஆயிரம் ரூபாய் செலவில் அவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகவும், அரசுப் பள்ளிகளுடன் தனியார் பள்ளிகளும் கைகோர்த்து, தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்ல வேண்டும் என்றும் அமைச்சர் திரு.க.பாண்டியராஜன் கேட்டுக்கொண்டார்.