மறைந்த முதல்வர் ஜெயலலிதா எதற்கும் அஞ்சாதவர்,விடா முயற்சியும், போராட்டக் குணமும் மிக்கவர் ; சட்டசபை இரங்கல் தீர்மானத்தில் மு.க.ஸ்டாலின் புகழாரம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா எதற்கும் அஞ்சாதவர்,விடா முயற்சியும், போராட்டக் குணமும் மிக்கவர் ; சட்டசபை இரங்கல் தீர்மானத்தில் மு.க.ஸ்டாலின் புகழாரம்

செவ்வாய், ஜனவரி 24,2017,

தமிழக சட்டப்பேரவையில் இன்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இரங்கல் தீர்மானத்தை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாசித்தார்.தனது வாழ்நாள் முழுவதையும் தமிழக மக்களுக்காக அர்ப்பணித்தவர் ஜெயலலிதா. இந்த உலகில் இருந்து மறைந்தாலும், எங்களின் இதயத்தில் இருந்து தமிழகத்தை வழிநடத்தி செல்வார். சவால்களை வென்று சரித்திரம் படைத்தவர் ஜெயலலிதா. மாநில சுயாட்சிக்கு குரல் கொடுத்தவர். தமிழக சட்டசபையில் முதல் பெண் எதிர்க்கட்சி தலைவர் என்ற பெருமையை ஜெயலலிதா பெற்றவர் எனக்கூறினார்.

இதைத் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், எதற்கும் அஞ்சாமல் எதையும் எதிர்கொள்ளக் கூடியவர் ஜெயலலிதா என்றும், எம்ஜிஆர் மறைவுக்கு பின் கட்சியை ஆளும் கட்சி அந்தஸ்து வரை உயர்த்திவர் ஜெயலலிதா என்றும் புகழாரம் சூட்டினார்.

காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவர் கே.ஆர்.ராமசாமி பேசுகையில், எந்த பிரச்னையானாலும் தைரியமாக முடிவு எடுக்கக்கூடியவர் ஜெயலலிதா என்றும், விடா முயற்சியும், போராட்டக் குணமும் மிக்கவர் ஜெயலலிதா என்றும் கூறினார்.