மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 69-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு 690 சிறப்பு மருத்துவ முகாம்களுக்கு ஏற்பாடு

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 69-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு  690 சிறப்பு மருத்துவ முகாம்களுக்கு ஏற்பாடு

சென்னை : 

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 69-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சுகாதாரத் துறையின் மூலம் தமிழகத்தில் 690 சிறப்பு மருத்துவ முகாம்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

தமிழக சுகாதாரத் துறை, அரசு மருத்துவமனை மற்றும் முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளின் மூலம் தமிழகம் முழுவதும் பிப்ரவரி 24 முதல் 28-ஆம் தேதி வரை 690 மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளன.
முகாம்களில் பிறவிக் குறைபாடுகளுக்கான சிறப்பு பரிசோதனைகளுக்கும், கர்ப்பிணிகளுக்கான சிறப்பு பரிசோதனைகளுக்கும், புற்றுநோய் பரிசோதனைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும்.
5 நாள்கள் நடைபெறும் இந்த முகாம்களை பொதுமக்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.