மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 69வது பிறந்தநாளை முன்னிட்டு திருமங்கலம் ஒன்றிய கழகத்தின் சார்பில் பொதுமக்கள் ஆயிரம் பேருக்கு அன்னதானம்

மறைந்த முதல்வர்  ஜெயலலிதாவின் 69வது பிறந்தநாளை முன்னிட்டு திருமங்கலம் ஒன்றிய கழகத்தின் சார்பில் பொதுமக்கள் ஆயிரம் பேருக்கு அன்னதானம்

புதன்கிழமை, மார்ச் 01, 2017,

திருமங்கலம் : மதுரை மாவட்டம் திருமங்கலம் ஒன்றியம் தங்களாச்சேரி கிராமத்தில், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 69வது பிறந்த நாளை முன்னிட்டு திருமங்கலம் ஒன்றிய கழகத்தின் சார்பில்  பொதுமக்கள் ஆயிரம் பேருக்கு  அன்னதானம் வவழங்கப்பட்டது.

திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளிலிருக்கும் அனைத்து கிராமங்கள் மற்றும் ஊராட்சிகளில் மறைந்த தமிழக முதல்வரின் 69வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தி அன்னதானம் வழங்கிடும் நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இதன் ஒருபகுதியாக திருமங்கலம் ஒன்றியம் தங்களாச்சேரி கிராமத்திலுள்ள விநாயகர் கோவில்  வளாகத்தில் திருமங்கலம் ஒன்றிய கழகத்தின் சார்பில் பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் ஆயிரம் பேருக்கு நேற்று அன்னதானம் வழங்கிடும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்நிழ்ச்சிக்கு திருமங்கலம் ஒன்றிய கழகச் செயலாளர் வக்கீல் அன்பழகன் தலைமை வகித்தார்.மாவட்ட துணைச் செயலாளர் பி.அய்யப்பன்,முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன்,ஒன்றிய அம்மா பேரவை தலைவர் சாத்தங்குடி தமிழழகன்,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஏராளமானோர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் மதுரை புறநகர் மாவட்ட அம்மா பேரவை செயலாளர்,முன்னாள் எம்.எல்.ஏ.,கே.தமிழரசன் கலந்து கொண்டு அன்னதான விழாவை தொடங்கி வைத்தார்.முன்னதாக விநாயகர் கோவில் வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மறைந்த தமிழக முதல்வர் அம்மாவின் திருவுருவப் படத்திற்கு கட்சி நிர்வாகிகள் மலர்களை தூவி மரியாதை செலுத்தினார்கள்.

இந்நிழ்ச்சியில் கள்ளிக்குடி ஒன்றிய கழகச் செயலாளர் உலகாணி மகாலிங்கம்,திருமங்கலம் ஒன்றிய அவைத்தலைவர் அன்னக்கொடி,முன்னாள் ஒன்றிய செயலாளர் பாண்டியன்,முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் செல்வம்,கட்சி நிர்வாகிகள் தென்னரசு,விஜயன்,அழகுமலை முன்னாள் உரப்பனூர் பஞ்சாயத்து தலைவர் சாமிநாதன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.