மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் ரூ.22 லட்சத்தில் குடிநீர் வசதி : அமைச்சர் செல்லூர் ராஜூ

மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் ரூ.22 லட்சத்தில் குடிநீர் வசதி : அமைச்சர் செல்லூர் ராஜூ

ஜூலை ,26 ,2017 ,புதன்கிழமை, 

சென்னை : முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் ரூ.21 லட்சத்து 70 ஆயிரத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.

சென்னை மெரினா கடற்கரையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் அமைந்துள்ளது. அங்கு பொதுமக்கள் வசதிக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்து தரப்பட உள்ளது. இதற்கான இடத்தை தேர்வு செய்வதற்காக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நேற்று ஆய்வு மேற் கொண்டார்.

அப்போது அவர் கூறிய தாவது:- மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்துக்கு தமிழகம், பிற மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான பொதுமக்கள், மாணவ, மாணவியர் வருகின்றனர். அவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் பொதுநல நிதியில் இருந்து ரூ.21 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் எளிதில் நினைவகத்தின் அருகில் சிரமமின்றி குடிநீர் பெறும் வகையில் எந்த இடத்தில் ‘ஆர் ஓ பிளான்ட்’ நிறுவலாம் என்பது தொடர்பாக பொதுப்பணி, செய்தித் துறையினருடன் ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.