மலைவாழ் கிராம மக்கள் நலனுக்காக சுதாதார நிலையம், குழந்தைகள் சிகிச்சைக்காக தனிக்கட்டடம் அமைத்து தந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பொது மக்கள் நன்றி

மலைவாழ் கிராம மக்கள் நலனுக்காக சுதாதார நிலையம், குழந்தைகள் சிகிச்சைக்காக தனிக்கட்டடம் அமைத்து தந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பொது மக்கள் நன்றி

புதன், மார்ச் 23,2016,

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும் எல்லா வளங்களும் பெறவேண்டும் என்ற உயரிய லட்சியத்துடன் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை செயல்படுத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் மலைவாழ் கிராமக்களின் நலனுக்காக சுதாதார நிலையம், அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்திட தனிக் கட்டடம் உள்ளிட்டவை அமைத்து தரப்பட்டுள்ளன. இவற்றால் பயனடைந்துள்ள பொதுமக்கள், முதலமைச்சருக்கு நெஞ்சம் நெகிழ நன்றி தெரிவித்துள்ளனர்.

மாநகரங்கள் மட்டுமின்றி, கிராமங்களும் சீரான வளர்ச்சி பெறவேண்டும் என்ற நோக்கத்துடன் முதலமைச்சர்  ஜெயலலிதா தொலைநோக்குப் பார்வையுடன் பல்வேறு சீரிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதன் ஒரு பகுதியாக கிராமபுற மக்கள் சுகாதாரமாகவும், ஆரோக்கியமாகவும் வாழவும், நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழிக்கு ஏற்ப நோயற்ற சமுதாயத்தை உருவாக்கவும், கிராமப்புறங்களில் வாழும் ஏழை எளிய மக்கள் உயர்தர மருத்துவ சிகிச்சைகளைப்பெறவும் எண்ணற்ற திட்டங்களை முதலமைச்சர் செயல்படுத்தி வருகின்றார்.

ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதி அதிக கிராம மக்களைக்கொண்டதாகும். இங்கு வசிக்கும் தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கும் தேவையான மருத்துவ வசதிகள் தங்கு தடையின்றி கிடைத்திட வேண்டும் என்ற நோக்கில், கிராமங்கள் தோறும் முதலமைச்சர் தொடங்கிவைத்த ஆரம்ப சுகாதார நிலையங்கள், பிரவசவசதிகொண்ட மருத்துவனைகள் போன்றவை, வரும் முன் காப்போம் என்ற உயர்ந்த லட்சியத்துடன் இயங்கிவருகின்றன. மேலும் 10 லட்சம் ரூபாய் மதிப்பில் சிறுவலூர் அரசு ஆரம்ப சுகாதார வளாகம், 44 லட்சம் ரூபாய் மதிப்பில் கோபி அரசு மருத்துவமனையில் புதிய கட்டடம், 5 லட்சம் ரூபாய் மதிப்பில் சோலார் வசதி, 31 லட்சம் ரூபாய் செலவில் நம்பியூரில் 30 படுக்கைகள் கொண்ட கூடுதல் கட்டடம், 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் 2 கோடியே 27 லட்சம் மதிப்பீட்டில் பச்சிளம் குழந்தைகள் நல காப்பகம் என சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட சுகாதாரப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளன.

இதன்மூலம், சத்தியமங்கலம், தாளவாடி, கடம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மலைவாழ் மக்கள், சிகிச்சைக்காக கோவை, ஈரோடு, கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல வேண்டிய நிலை மாறியுள்ளது. தற்போது கிராமப்புறங்களிலேயே அனைத்து பரிசோதனை வசதிகளுடன் கூடிய சிகிக்சையளிக்கப்படுவதால் ஏராளமான மக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த சுகாதார மையங்களில் அனைத்து விதமான நோய்களுக்கும் சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுவதால் மகிழ்ச்சியடைந்துள்ள மலைவாழ் மக்கள், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துள்ளனர்.