மழைக்கால நிவாரணத் தொகையாக 13 ஆயிரத்து 118 மண்பாண்டதொழிலாளர்களுக்கு தலா 4 ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர் சங்கம் நன்றி

மழைக்கால நிவாரணத் தொகையாக 13 ஆயிரத்து 118 மண்பாண்டதொழிலாளர்களுக்கு தலா 4 ஆயிரம்  ரூபாய் வழங்க உத்தரவிட்ட  முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு  தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர் சங்கம் நன்றி

செவ்வாய், ஜனவரி 19,2016,

முதலமைச்சர் ஜெயலலிதாவின் சீரிய திட்டத்தால், தமிழகத்தில் மண்பாண்டத் தொழில் தற்போது புத்துயிர் பெற்றுள்ளது. அழிவின் விளிம்பிலிருந்த மண்பாண்டத் தொழிலை காப்பாற்றியுள்ள முதலமைச்சருக்கு தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

ஏழை-எளிய தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், நசிந்து வரும் பல்வேறு பாரம்பரிய தொழில்களுக்கு புத்துயிர் கொடுத்து காக்கும் வகையிலும், முதலமைச்சர் ஜெயலலிதா பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு மழைக்காலங்களில் ஏற்படும் பின்னடைவை சமாளிக்கும் வகையில் அவர்களுக்கு மழைக்கால வாழ்வாதார நிவாரணத் தொகையாக தலா 4 ஆயிரம் ரூபாய் வழங்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்திருந்தார். இதனைத்தொடர்ந்து இந்த ஆண்டு 13 ஆயிரத்து 118 தொழிலாளர்களுக்கு மழைக்கால வாழ்வாதார நிவாரணத் தொகையாக தலா 4 ஆயிரம் ரூபாய் வழங்கும் பணி தொடங்கியுள்ளது. முதலமைச்சர் ஜெயலலிதாவின் இந்த திட்டத்தால், மண்பாண்டத் தொழில் தற்போது புத்துயிர் பெற்றுள்ளது. நூற்றாண்டு கால பழமையான இந்த மண்பாண்டத் தொழிலை அழிவின் விளிம்பிலிருந்து காப்பாற்றியுள்ள முதலமைச்சருக்கு, இத்திட்டத்தின் மூலம் பயனடைந்த 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.