மழையை வைத்து அரசியல் நடத்தி, மக்களை மீண்டும் ஏமாற்ற முயற்சிக்கும் தி.மு.க., தே.மு.தி.க உள்ளிட்ட கட்சிகளுக்கு பொதுமக்களுக்கு கண்டனம் – அனைத்து அடிப்படை வசதிகளையும் வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி – பாராட்டு

மழையை வைத்து அரசியல் நடத்தி, மக்களை மீண்டும் ஏமாற்ற முயற்சிக்கும் தி.மு.க., தே.மு.தி.க உள்ளிட்ட கட்சிகளுக்கு பொதுமக்களுக்கு கண்டனம் – அனைத்து அடிப்படை வசதிகளையும் வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி – பாராட்டு

இயற்கையோடு மனிதன் போராட முடியும். ஆனால் வெற்றி பெற முடியாது என்பதுதான் நியதி. இயற்கை சீற்றங்களால் பாதிப்பு ஏற்படும்போது, பல்வேறு நிவாரணப்பணிகளையும், நிதியுதவிகளையும் வழங்கி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு அளித்துவரும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசை குறைகூறி அரசியல் நடத்தும் தி.மு.க., தே.மு.தி.க உள்ளிட்ட கட்சிகளுக்கு, பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சுனாமி, பேரலைகள், பெருந்துன்பம் எல்லாம் இயற்கையினால் ஏற்படுவது. இவற்றோடு மனிதன் பேராட முடியும். ஆனால் வெற்றிபெறமுடியாது என்பதை உலகம் காலம் காலமாக சந்தித்து வருகிறது. வருடத்தில் 365 நாட்களும் புயல் சீற்றம், பாதிப்புகள் ஏற்படுவதில்லை. ஆனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையை அறிவித்த பிறகு, மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பது, உணவு, உடைகள் உள்ளிட்டவை வழங்குவதில், அ.இ.அ.தி.மு.க. அரசு முனைப்பாக செயல்படுவது மக்கள் அறிந்த ஒன்று.

புயல், மழை, உள்ளிட்ட இயற்கை பாதிப்புகளை வைத்து, அரசியல் நடத்தும் தி.மு.க. தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சிகளை தமிழக மக்கள் ஓரம் கட்டி வைத்து நெடுங்காலம் ஆகிவிட்டது. இருந்தபோதிலும், நாங்களும் அரசியல் வாதிகள்தான், மக்களுக்காக உழைப்போம் என்று கூப்பாடு போடுவது வேடிக்கையான செயல் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அன்று “தானே” புயல் தமிழகத்தை தாக்கியபோது, பாதிக்கப்பட்ட கடலூர் மக்களுக்கு உடனடியாக நிவாரண உதவிகள், புதிய குடியிருப்புகள், வழங்கியவர் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள். தமிழக மக்களுக்ககாக எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து, தொடர்ந்து செயல்படுத்தி, இந்தியாவிலேயே, தமிழகம் அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் அடைய வழிவகுவத்தவர், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாதான் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

“தானே” புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்திற்கு 850 கோடி ரூபாய் உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து, அம்மாவட்ட மக்களை நேரில் சந்தித்து நிவாரண உதவிகள், நிதியுதவிகள் வழங்கி, அவர்களுக்கு மறுவாழ்வு கொடுத்தவர், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா.

தமிழக மக்களுக்காகவே செயல்பட்டு கொண்டிருக்கும், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசை, குறைகூறி கூப்பாடு போடும், தி.மு.க., தே.மு.தி.க. உள்ளிட்ட உதிரிக் கட்சிகளுக்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஸ்பெக்டரம், ஊழல், பி.எஸ்.என்.எல் தொலைதொடர்பு இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்தியது. சொந்தவீட்டுக்கே அத்துமீறி மின்சாரத்தை திருடியது மேம்பாலங்கள் கட்டியதில் பல கோடி ரூபாய் சுருட்டல், மக்கள் வரிப்பணத்தை வீணடித்துவிட்டு, அதை மறைப்பதற்காக வண்ணத் தொலைக்காட்சியை அவர்களது கட்சிக்காரர்களுக்கு மட்டும் வழங்கியது என அடுக்கடுக்கான ஊழல்களை செய்த தி.மு.கவை மக்கள் இனி ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என, தமிழக மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

உதிரிக்கட்சிகளின் செயல்பாடுகள், “கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவர்கள் வானம் ஏறி வைகுண்டம் போவது போல் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது, இயற்கையினால் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்படி, அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், நேரில் ஆய்வு மேற்கொண்டு, நிவாரண உதவிகள் வழங்கி வருவதுடன், சீரமைப்புப் பணிகளையும் துரிதப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.