மழை கால நிவாரணத் தொகை வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, மண்பாண்ட தொழிலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் நன்றி தெரிவித்து தீர்மானம்

மழை கால நிவாரணத் தொகை வழங்கிய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு,  மண்பாண்ட தொழிலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் நன்றி தெரிவித்து தீர்மானம்

சனி,நவம்பர்,28-2015

திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற மண்பாண்ட தொழிலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், மழை கால நிவாரணத் தொகை 4 ஆயிரம் ரூபாய் வழங்கிய, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டடது.

பாளையங்கோட்டையில் உள்ள வண்ணார்பேட்டையில் அகில இந்திய குலார் முன்னேற்றக் கழக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மண்பாண்ட தொழிலாளர்களுக்கு, மழைகால நிவாரணத் தொகையாக தலா 4 ஆயிரம் ரூபாய் வழங்கியதற்காக, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.