மழை கொட்டி தீர்த்த போதிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் மக்களை பாதுகாத்தவர் முதலமைச்சர் ஜெயலலிதா : ஸ்ரீரங்கம் ஆண்டவன் சுவாமிகள் பாராட்டு

மழை கொட்டி தீர்த்த போதிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் மக்களை பாதுகாத்தவர் முதலமைச்சர் ஜெயலலிதா : ஸ்ரீரங்கம் ஆண்டவன் சுவாமிகள் பாராட்டு

வெள்ளி,நவம்பர்,27-2015

சென்னை உட்பட வட மாவட்டங்களில் 3 மாதத்தில் பெய்ய வேண்டிய மழை 3 நாட்களில் கொட்டி தீர்த்த போதிலும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி, பாதுகாத்தது குறித்து ஸ்ரீரங்கம் ஆண்டவன் சுவாமிகள் பாராட்டு தெரிவித்துள்ளார். முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா நீண்ட ஆயுளுடன் தொடர்ந்து, பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டுமென நம்பெருமாளை பிரார்த்திப்பதாகவும் ஆண்டவன் சுவாமிகள் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீரங்கம் கோயிலில் பழைமை மாறாமல் பல கோடி ரூபாய் செலவில் திருப்பணி மேற்கொண்டு, மகா சம்ப்ரோக்ஷணம் நடத்த உத்தரவிட்ட முதலமைச்சருக்கு சுவாமிகள் நன்றி தெரிவித்துக் கொண்டார்.