மழை நிவாரணப் பணிகளுக்காக கடலூர் மாவட்டத்திற்கு 5 அமைச்சர்களை அனுப்பி வைத்தார் முதலமைச்சர்

மழை நிவாரணப் பணிகளுக்காக கடலூர் மாவட்டத்திற்கு 5 அமைச்சர்களை அனுப்பி வைத்தார் முதலமைச்சர்

தற்போதைய வடகிழக்கு பருவமழை வெள்ளத்தில் கடலூர் மாவட்டத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.  உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவித் தொகையை உடனடியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். அதே போன்று கால்நடை இழப்பு மற்றும் குடிசைகள் சேதங்கள்   ஆகியவற்றுக்கும் நிவாரண உதவிகளை உடனுக்குடன் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

கடலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகளை மேலும் துரிதப்படுத்தவும், மேற்பார்வையிடவும் அதிகாரிகளுக்கு உரிய அறிவுரைகள் வழங்கவும் நிதி மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் நத்தம் இரா. விசுவநாதன், வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம், மீன்வளத் துறை அமைச்சர் கே.ஏ.ஜெயபால், வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆகியோரை கடலூர் மாவட்டத்திற்கு நான் அனுப்பி வைத்துள்ளேன்.

இதர மாவட்டங்களிலும் மழை பாதிப்பு இல்லாத வகையில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சேதங்கள் ஏற்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.