மழை – வெள்ளத்தால் உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு16 லட்சம் ரூபாய் நிதியுதவி:உடனடியாக வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு,கன மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவி செய்வதற்காக 15 சிறப்பு அதிகாரிகளையும் நியமித்தார்

மழை – வெள்ளத்தால் உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கு16 லட்சம் ரூபாய் நிதியுதவி:உடனடியாக வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு,கன மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவி செய்வதற்காக 15 சிறப்பு அதிகாரிகளையும் நியமித்தார்

செவ்வாய், டிசம்பர் 01,2015,

முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பெய்து வரும் வடகிழக்குப் பருவமழையின் காரணமாக கடந்த 28ம் தேதி, திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான், உதயனேரி கிராமத்தைச் சேர்ந்த திரு. சங்கரபாண்டி மகன் ஆறுமுக காந்தி தனது வயலுக்குச் சென்ற போது, வெள்ளப் பெருக்கின் காரணமாக நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து மிகவும் துயரம் அடைந்ததாகத் தெரிவித்துள்ளார்.

சென்னை மாவட்டம், மாம்பலம் வட்டம், கே.கே நகரைச் சேர்ந்த, திரு. தங்கராஜ் மகன் ஆறுமுகம் மற்றும் வடபழனி வட்டம், சோமசுந்தரபாரதி நகரைச் சேர்ந்த திரு. மூர்த்தி மகன் கார்த்திக் ஆகியோர் வெள்ளப் பெருக்கின் காரணமாக ஆற்றுப்பாலத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர் என்ற செய்தியையும்; மயிலாப்பூர் வட்டம், ராஜாஅண்ணாமலைபுரம், கோவிந்தசாமி நகரைச் சேர்ந்த திரு. சுப்பையா மகன் பாபு மழை நீர் கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து தாம் மிகவும் துயரம் அடைந்ததாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில், பல்வேறு மாவட்டங்களில் பெய்த கன மழையின் காரணமாக பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த இந்த நான்கு பேரின் குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், இந்தத் துயரச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தலா நான்கு லட்சம் ரூபாய் நிதியுதவி உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவி செய்வதற்காக 15 சிறப்பு அதிகாரிகள்:

சென்னையில் பெய்து வரும் கன மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவி செய்வதற்காக 15 சிறப்பு அதிகாரிகளை தமிழக முதல்வர் ஜெயலலிதா நியமித்துள்ளார்.

மாநகராட்சியின் 15 மண்டலங்களுக்கும் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் விவரம்:

1. எல்.நிர்மல்ராஜ் – 98408 71259, 2. டி.என். வெங்கடேஷ் – 90876 07776, 98433 27000, 3. எம்.சந்திரசேகரன் – 94454 77801, 4. ராஜேந்திர ரத்னோ –  98403 52966, 5. பி.உமாநாத் – 94435 26829, 6.  சி.காமராஜ் – 98403 77970, 7. ஜி.லதா – 95430 46000.

8. டி.கார்த்திகேயன் – 94433 31910, 9. காக்கர்ல உஷா – 99529 88286, 10.  சி.விஜயகுமார் – 95000 37711, 11. கிர்லோஷ் குமார் – 94430 53962, 12. கே.மணிவண்ணன் – 94430 53962, 13. ஸ்வர்ணா – 99529 52286, 14. ஆர்.பழனிசாமி – 98400 63196, 15. ஏ.கார்த்திக் – 95661 30507.