மழை வெள்ளத்தால் பாடநூல்களை இழந்த, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுக்கிணங்க விலையில்லா பாடநூல்கள் விநியோகம்

மழை வெள்ளத்தால் பாடநூல்களை இழந்த, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுக்கிணங்க விலையில்லா பாடநூல்கள் விநியோகம்

புதன்கிழமை, டிசம்பர் 16, 2015,

பருவமழை வெள்ளத்தால் பாடநூல்களை இழந்த, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுக்கிணங்க விலையில்லா பாடநூல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

அண்மையில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் பாடநூல்களை இழந்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், அவர்களுக்கு விலையில்லா பாட நூல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

சுயநிதி பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எவரேனும் பாட நூல்களை இழந்திருந்தால், அவர்களுக்கு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் www.textbookcorp.in என்ற இணையதள வழியில் உரிய பதிவுசெய்து, தத்தம் வீட்டு முகவரியிலேயே பாடநூல்களை பெற்றுக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

இது தவிர தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் இணையதளத்தில் தரப்பட்டுள்ள வட்டார அலுவலகங்களிலும் போதுமான புத்தகங்கள் விற்பனைக்கு உள்ளன.

மேலும், தனியார் பள்ளிகள் கூடுதல் பாடநூல்கள் கோரும் நிகழ்வுகளில், ஏற்கெனவே உள்ள நடைறைப்படி இணையவழி சேவையைப் பயன்படுத்தி, உடனுக்குடன் பாடநூல்களை பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.