மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு மற்றும் மறுவாழ்வுப் பணிகளுக்காக அ.இ.அ.தி.மு.க. எம்.பி.க்கள் ரூ.48 கோடி நிதி:முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் வழங்கினர்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு மற்றும் மறுவாழ்வுப் பணிகளுக்காக அ.இ.அ.தி.மு.க. எம்.பி.க்கள் ரூ.48 கோடி நிதி:முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் வழங்கினர்

புதன்கிழமை, ஜனவரி 06, 2016,

முதலமைச்சர் ஜெயலலிதாவிடம், தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சீரமைப்பு மற்றும் மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக, அ.இ.அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 1 கோடி ரூபாய் வீதம், மொத்தம் 48 கோடி ரூபாய் வழங்கினார்கள்.

முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் தலைமைச் செயலகத்தில், தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சீரமைப்பு மற்றும் மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்காக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பில், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 1 கோடி ரூபாய் வீதம், மொத்தம் 48 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.

இதற்கான ஒப்புதல் கடிதத்தை மக்களவை துணைத் தலைவர் டாக்டர் எம். தம்பிதுரை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற குழுத் தலைவர் டாக்டர் பி. வேணுகோபால் மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மாநிலங்களவை குழுத் தலைவர் திரு.ஏ. நவநீதகிருஷ்ணன் ஆகியோர் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் வழங்கினார்கள்.