மழை வெள்ளத்தினால் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை இழந்த பல்லாயிரக்கணக்கானோர்,முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், கட்டணமின்றி நகல் சான்றிதழ்களை சிறப்பு முகாம்கள் மூலம் பெற்று பயனடைந்தனர்

மழை வெள்ளத்தினால் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை இழந்த பல்லாயிரக்கணக்கானோர்,முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், கட்டணமின்றி நகல் சான்றிதழ்களை சிறப்பு முகாம்கள் மூலம் பெற்று  பயனடைந்தனர்

திங்கள் , டிசம்பர் 28,2015,

மழை வெள்ளத்தினால் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை இழந்த பல்லாயிரக்கணக்கானோர்,முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், கட்டணமின்றி நகல் சான்றிதழ்களை சிறப்பு முகாம்கள் மூலம் பெற்று  பயனடைந்தனர்

சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், வடகிழக்கு பருவமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக ஏராளமானோர் தங்களது வீட்டுமனைப்பட்டா, கல்வி சான்றிதழ், எரிவாயு இணைப்பு அட்டை, ஆதார் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகம், நிலம் மற்றும் வீட்டு கிரையப் பத்திரம் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை இழந்தனர். அவர்களுக்கு, கட்டணமின்றி அவற்றின் நகல்களை வழங்கும் வகையில், முதலமைச்சர் ஜெயலலிதா ஆணைப்படி, சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. சென்னை மாவட்டத்தில் 10 வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் கடந்த 14-ம் தேதி முகாம் தொடங்கியது. பல்லாயிரக்கணக்கானோருக்கு கட்டணமின்றி நகல் ஆவணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

திருவள்ளூர் மாவட்டம் மணலி மற்றும் திருத்தணி ஆகிய இடங்களில் நேற்றும் ஏராளமானோர் முகாம்களில் கலந்து கொண்டு நகல்களை பெற்றுக்கொண்டனர்.

தமிழக அரசின் பல்வேறு துறை அலுவலர்கள் மற்றும் மத்திய அரசு தொடர்புடைய நிறுவனங்களின் அலுவலர்கள் இம்முகாம்களில் பங்கேற்று ஆவணங்களை வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில், பண்ருட்டி, சிதம்பரம், நெய்வேலி, புவனகிரி, காட்டுமன்னார்கோவில், திட்டக்குடி உள்ளிட்ட வட்டங்களில், நகல் சான்றிதழ்களை வழங்கும் முகாம் நடைபெற்று வருகிறது. இதேபோல், வெள்ளம் பாதித்த பிற மாவட்டங்களிலும் முகாம்கள் நடைபெறுகின்றன. இன்று மாலையுடன் இந்த முகாம்கள் நிறைவடையவுள்ளன.