மழை-வெள்ளத்தில் உயிரிழந்த 22 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம்,உடனடியாக வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

மழை-வெள்ளத்தில் உயிரிழந்த 22 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம்,உடனடியாக வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

வெள்ளி, டிசம்பர் 04,2015,

 

மழை-வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 22 பேர் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து, இன்று அவர் வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறியிருப்பதாவது:

விழுப்புரம் மாவட்டம் தாவடிப்பட்டு கிராமத்தின் தமிழ்செல்வன்; திருவள்ளூர் மாவட்டம் கோங்கல் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன்; பூந்தமல்லி கொத்தப்பாளையத்தைச் சந்தோஷ்; புங்கத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பாபு; திருவண்ணாமலை மாவட்டம் கண்டவராட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ்; வேலூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த இந்திரன்; காஞ்சிபுரம் மாவட்டம் பொன்விளைந்தகளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஹேமமாலினி; சிட்லப்பாக்கத்தைச் சேர்ந்த செல்லன்; செங்கல்பட்டு வட்டம் சித்தமனூர் கிராமத்தைச் சேர்ந்த தெய்வசிகாமணி; கீழ்க்கரனை கிராமத்தைச் சேர்ந்த சந்திரசேகர்; திருக்கழுக்குன்றம் ஜீவா நகரைச் சேர்ந்த வேதகிரி ஆகியோர் கன மழையின் காரணமாக வெள்ள நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

வீட்டு சுவர் இடிந்து விபத்து: தூத்துக்குடி மாவட்டம் கே. குமரெட்டையாபுரத்தைச் சேர்ந்த தாமோதரன்; வேலூர் மாவட்டம் அரும்பாக்கம் கிராமத்தைச்  ராஜாமணி; தேனி மாவட்டம் கம்பம் நகரைச் சேர்ந்த சாவித்திரி; விழுப்புரம் மாவட்டம் பூத்துறை கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த்;  விக்கிரவாண்டி  சோழகனூர் கிராமத்தைச் சேர்ந்த அஸ்வின்; மதுரை மாவட்டம் வெயில்வந்தாபுரம் கிராமத்தைச் சேர்ந்த தாமரைசெல்வி ஆகியோர் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

நீரில் மூழ்கி இறப்பு: சென்னை நொச்சிகுப்பத்தைச் சேர்ந்த வேலு, மழையின் காரணமாக படகு கவிழ்ந்ததில் கடலில் மூழ்கி உயிரிழந்தார்.    திருவள்ளூர் மாவட்டம் பெத்திக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பாலாஜி; வெங்கத்தூர் கிராமத்தைச் சேர்ந்த குமார், சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த  ஜான்சன் ஆகியோர் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் புதுப்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த பாரதி, பாலத்திலிருந்து தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்தார்.

இந்தச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம்,  பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று தனது அறிவிப்பில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.