மழை – வெள்ளத்தில் சிக்கி பலியான 10 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

மழை – வெள்ளத்தில் சிக்கி பலியான 10 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

வியாழக்கிழமை, டிசம்பர் 17, 2015,

இதுகுறித்து புதன்கிழமை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பு:

நீரில் மூழ்கி…
திருவள்ளூர் மாவட்டம், காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த பரமசிவம், சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ், விச்சூர் கிராமத்தைச் சேர்ந்த பிரதாப், காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த அஜீத்குமார், சுந்தரமூர்த்தி, விழுந்தாங்கால் கிராமத்தைச் சேர்ந்த வசந்த், திருநெல்வேலி மாவட்டம், தண்டையார்குளம் கிராமத்தைச் சேர்ந்த மரியகபிலா ஆகியோர் பலத்த மழையின் காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

சுவர் இடிந்து விழுந்து…
திருவள்ளூர் மாவட்டம், விச்சூர் கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன், மோவூர் கிராமத்தைச் சேர்ந்த மகாலிங்கம் ஆகியோர் பலத்த மழையின் காரணமாக, வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். திருவள்ளூர் மாவட்டம், ஆலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பரமசிவம், மழையின் காரணமாக மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சம், பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.