மழை-வெள்ளம்: பலியான 8 பேரின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிதி:முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

மழை-வெள்ளம்: பலியான 8 பேரின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிதி:முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

18 November 2015

மழை-வெள்ளத்தில் சிக்கி பலியான 8 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதியை வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள உளுந்தூர் கிராமத்தைச் சேர்ந்த வேலு, வேலூர் மாவட்டத்தில் உள்ள அரியூர் கிராமத்தைச் சேர்ந்த பிரீத்தி, அரக்கோணம் அமீர்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த கெங்க மந்திரி, புளியந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த அமுதா ஆகிய 4 பேர் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பலத்த காயம் அடைந்து உயிரிழந்தனர்.

இதேபோல், வேலூர் மாவட்டத்தில் உள்ள கதாவளம் கிராமத்தின் கிளியம்மாள், காஞ்சிபுரம் மாவட்டத்தின் மேலமையூர் கிராமத்தின் அஞ்சலை, கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த முனுசாமி, பட்டரவாக்கத்தின் சதீஷ் ஆகிய 4 பேர் வெள்ளப் பெருக்கால் நீரில் மூழ்கி இறந்தனர்.

இந்த 8 பேரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.4 லட்சத்தை பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உடனடியாக வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.