மழை வெள்ள நிவாரண உதவிகள் அறிவிப்பு: முதல்வர் ஜெயலலிதாவுக்கு பொதுமக்கள் நன்றி

மழை வெள்ள நிவாரண உதவிகள் அறிவிப்பு: முதல்வர் ஜெயலலிதாவுக்கு பொதுமக்கள் நன்றி

புதன், டிசம்பர் 09,2015,

சென்னை, தமிழகத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு முதல்வர் ஜெயலலிதா நிவாரண உதவிகளை அறிவித்துள்ளதற்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு முதல்வர் ஜெயலலிதா நிவாரண உதவிகளை அறிவித்துள்ளார். வீடுகளை இழந்தோருக்கு தலா ரூ.10 ஆயிரம், வெள்ளப்பெருக்கை சந்தித்தவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம், கால் நடை இழப்புக்கு ரூ.30 ஆயிரம், பயிர் இழப்புக்கு ஹெக்டேருக்கு ரூ.18 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதற்கு முதல்வர் ஜெயலலிதாவுக்கு பொது மக்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளனர்.

சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த கமலா கூறியதாவது நான் சென்னை தேனாம் பேட்டை திருவள்ளூர் சாலையில் இருக்கிறேன். முதல்வர் அம்மா எங்களுக்கு நன்மை செய்து இருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மழை வெள்ளத்தில் அதிகம் கஷ்டப்பட்டோம். பாதி வீடுவரை தண்ணீர் வந்து விட்டது. அதில்  எங்களுக்கு பெரும் கஷ்டம் ஏற்பட்டது. முதல்வர் அம்மா ரூ.5 ஆயிரம் நிவாரண உதவி அளிப்பதாக அறிவித்து இருக்கிறார்கள். இது எங்களுக்கு மிகுந்த சந்தோஷத்தினை அளித்துள்ளது. இது மாதிரி உதவி செய்த அம்மாவுக்கு எங்கள் நன்றி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சென்னையை சேர்ந்த பாண்டி கூறுகையில். இந்த மழை வெள்ளத்தில் முதல்வர் அம்மா நிறைய உதவிகள் செய்துள்ளார். வீடு இழந்தவங்களுக்கு ரூ.10 ஆயிரமும் சாதாரண வீட்டுக்கு ரூ.5 ஆயிரம் தர்றாங்க. அம்மா பெரிய உதவி செய்து இருக்கிறார்கள். ரொம்ப மகிழ்ச்சி. முதல்வர் அம்மாவுக்கு கோடான கோடி நன்றி என்றார்.

சென்னை பள்ளி மாணவி லலிதா கூறியதாவது. என்னுடைய சர்டிபிகேட், பாட புத்தகங்கள் எல்லாம் மழை வெள்ளத்தில் அடித்து போய் விட்டது. அதையெல்லாம் மீண்டும் இலவசமாக தருவதாக முதல்வர் அம்மா அறிவித்து இருக்கிறார்கள். அதற்காக முதல்வர் அம்மா அவர்களுக்கு மாணவ மாணவிகள் சார்பில் கோடான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

சென்னை வ. உசி நகர் ராஜா கூறியதாவது. வரலாறு காணாத இந்த மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அம்மா சீரும்சிறப்புமாக நடவடிக் கை எடுத்து தண்ணீர் எல்லாம் வெளியேறச் செய்து இருக்கிறார்கள். மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு நிதி உதவியை முதல்வர் அம்மா அறிவித்து இருப்பது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. மழை வெள்ளத்தில் ரேஷன் கார்டு உள்பட முக்கிய ஆவணங்கள் போய்விட்டன. இதற்கு நகல் தரப்படும் என்று முதல்வர் அம்மா தெரிவித்து இருக்கிறார்கள். அதற்கு ஒரு சிறப்பு முகாம் ஏற்படுத்தி வழங்குவதாக முதல்வர் அறிவித்து உள்ளார். அம்மா அவர்களுக்கு எங்கள் நன்றி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சென்னை மோகனா கூறுகையில். எனது பேத்தியின் பாட புத்தகங்கள் எல்லாம் மழை நீரில் அடித்து செல்லப்பட்டது. அதனை தருவதாக முதல்வர் அம்மா தெரிவித்து உள்ளார். அம்மா அறிவிப்பு எங்களுக்கு சந்தோஷத்தை தந்துள்ளது என்றார்.

சென்னை  வித்யா கூறியதாவது. மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் ஒரு வார காலத்திற்கு மாநகர போக்குவரத்து பஸ்களில் செல்வதற்கு முதல்வர் அம்மா உத்தரவு பிறப்பித்து  இருந்தார்கள். இதனால் நாங்கள் மிகவும் பயன் அடைந்தோம். அம்மா அவர்களுக்கு எங்கள் கோடான கோடி நன்றிகள்.

சென்னை நுங்கம்பாக்கம் குமாரி கூறியதாவது. நான் காய்கறி வியாபாரம் செய்கிறேன். மழை வெள்ளம்வந்த போது மின்சாரம் இல்லாம இருந்தோம். அம்மா புண்ணியத்துல மின்சார விநியோகத்தை உடனடியாக சரி செய்தாங்க. பஸ் எல்லாம் இலவசமாக விட்டாங்க. சாப்பாடு எல்லாம் போட்டாங்க. இப்ப வீடு பாதிக்கப்பட்டதுக்கும் நிவாரண உதவியை அறிவிச்சு இருக்காக்காங்க. பசங்களுக்கு சர்டிபிகேட் நகல் தரப்படும்னு அறிவிச்சு இருக்காக்காங்க. புரட்சி தலைவர் எப்படி செஞ்சாரோ அதே மாதிரி அம்மாவும் செய்யறாங்க. அம்மா உதவிகளுக்கு எங்கள் குடும்பம் சார்பில் நன்றி தெரிவிக்கிறோம். இவ்வாறு அவர்  கூறினார்.