மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயர் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயர் : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

ஜூலை, 1 ,2017 ,சனிக்கிழமை, 

மதுரை : மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

மதுரையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு தொடக்க விழாவில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி,மதுரை, மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் பெயரை சூட்ட வேண்டும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், மதுரை மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் விடுத்த கோரிக்கையினை அரசு உடனடியாக ஏற்று, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்- மக்கள் தலைவராக – தமிழகத்தின் முதலமைச்சராக 40 வருடங்களுக்கு முன் அதாவது – 30.06.1977ல் பதவியேற்ற இதே நன்னாளில் மதுரை, மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் என்று பெயர் சூட்டப்படுகிறது.என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.