சொன்னதை செய்கின்ற ஒரே தலைவி முதலமைச்சர் அம்மா தான்:மாணவர்களுக்கு ரூ.3.7 கோடியில் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கி அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி உரை

சொன்னதை செய்கின்ற ஒரே தலைவி முதலமைச்சர் அம்மா தான்:மாணவர்களுக்கு ரூ.3.7 கோடியில் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கி அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி உரை

சனி, டிசம்பர் 19,2015,

சென்னை : விருதுநகர் மாவட்டத்தில் 14 பள்ளிகளை சேர்ந்த  2171 மாணவர்களுக்கு ரூ. 3.7 கோடி899 மதிப்பிலான விலையில்லா மடிக்கணினிகளை செய்தி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் .கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினார். விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல் சி.ரா. அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தமிழ்நாடு முதலமைச்சர்  சிறப்புத்திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் விழாவில், திருத்தங்கல் சி.ரா.அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள் 91 பேருக்கும், திருத்தங்கல் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள் 205 பேருக்கும், திருத்தங்கல் எஸ்.என்.ஜி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர்கள் 114 பேருக்கும், பூவநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள் 98 பேருக்கும், சிவகாசி முஸ்லீம் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள் 180 பேருக்கும், விளாம்பட்டி ஏ.வி.எம் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள் 189 பேருக்கும், சிவகாசி எ.யு.எம். மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள் 106 பேருக்கும், சாட்சியாபுரம் எஸ்.சி.எம்.எஸ் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள் 169 பேருக்கும், விஸ்வநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள் 57 பேருக்கும், சிவகாசி கார்நேசன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள் 83 பேருக்கும், எஸ்.எச்.என்.வி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 325 பேருக்கும், எஸ்.எச்.என்.வி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர்கள் 474 பேருக்கும், ரிசர்வ்லயன் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள் 49 பேருக்கும், கிருஷ்ணபேரி காமாக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள் 31 பேருக்கும் ஆக மொத்தம் 14 பள்ளிகளைச் சேர்ந்த 2171 மாணவ, மாணவியர்களுக்கு  ரூ. 3 கோடியே 7 லட்சத்து 60 ஆயிரத்து  899 மதிப்பிலான விலையில்லா மடிக்கணினிகளையும், வருவாய் ஈட்டும் தாய் ஃ தந்தை இறந்தாலோ அல்லது முடக்கம் அடைந்தாலோ 1-ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 15 மாணவ, மாணவியர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.7.50 லட்சம் மதிப்பிலான வைப்பு தொகையினையும் மாண்புமிகு செய்தி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர்.கே.டி.ராஜேந்திரபாலாஜி  வழங்கி பேசும் போது தெரிவித்ததாவது,

முதலமைச்சர் ஜெயலலிதா  அறிவிக்கின்ற திட்டங்கள் எல்லாமே மக்கள் நலன் காக்கும் திட்டம், விலையில்லா மிக்சி, கிரைண்டர் வழங்குகின்ற திட்டம் அது இல்லத்தரசிகளின் இன்னல்களைப் போக்குகின்ற திட்டம், விலையில்லா மடிக்கணினி வழங்குகின்ற திட்டம் ஏழை எளிய மாணவர்கள் உலகளாவிய கல்வி அறிவினைப் பெறுகின்ற திட்டம், விலையில்லா கறவை மாடுகள், விலையில்லா வௌ;ளாடுகள், செம்மறி ஆடுகள் வழங்குகின்ற திட்டம் அது ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் உயர்வதற்கான திட்டம் என ஏழை, எளிய மக்களுக்காக பல திட்டங்களை திட்டி செயல்படுத்தி வருகிறார்கள்.

முதலமைச்சர் ஜெயலலிதா  ஆட்சியில் தான் எல்லோர்க்கும் எல்லாம் கிடைக்கிறது. கல்விப்பணியில் மாணவர்களை வழிநடத்தி செல்கின்ற ஆசிரியர்களுக்கு எண்ணற்ற சலுகைகளை வழங்கியவர் முதலமைச்சர் ஜெயலலிதா தான். பலதரப்பாட்ட மக்களுக்கும் எண்ணற்ற சிறப்பான திட்டங்களைத்தீட்டி முதலமைச்சர் ஜெயலலிதா மக்களின் இதயங்களிலே சிம்மாசனம் போட்டு அமர்ந்துள்ளார். கல்விக்காக பெரும் நிதியினை ஒதுக்கிவரும் முதலமைச்சர் ஜெயலலிதா விருதுநகர் மாவட்டத்தில் மாணவ, மாணவியர்கள் இடைநிற்றலை தவிர்க்கும் பொருட்டு 10ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் 59,404 பேருக்கு தலா ரூ.5000 வீதம் ரூ.29 கோடியே 70 லட்சத்து 20 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் பெண்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் திருமண நிதியுதவியுடன் திருமாங்கயத்தங்கம் வழங்கி வருகிறார்கள்.

1-ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களின்; வருவாய் ஈட்டும் தாய் ஃ தந்தை இறந்தாலோ அல்லது முடக்கம் அடைந்தாலோ அவர்களுக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.50,000 வழங்கி வருகிறார்கள். இத்தொகை மாணவ, மாணவியர்கள் 21 வயதினை அடையும் போது பெறுகின்ற வகையில் மாணவ, மாணவியர்களின் பெயரில் வைப்புத்தொகையாக வைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் அந்த மாணவ, மாணவியர்கள் கல்லூரி பயில இத்தொகை பெருதவியாக இருக்கும். இத்தொகையினை முதலமைச்சர் ஜெயலலிதா ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.75 ஆயிரமாக உயர்த்தியுள்ளார்கள்.

இதுவரை 4 கட்டமாக 35 லட்சம் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது 5ம் கட்டமாக விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. 1 கோடியே 85 லட்சம் ஏழை எளிய மக்களுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். நான்கு கட்டமாக பணிகள் நிறைவு பொற்று தற்போது ஐந்தாம் கட்டமாக வழங்கும் பணி நடைபெற்று வருகிறது ஆக சொன்னதை செய்கின்ற ஒரே தலைவி முதலமைச்சர் அம்மா தான்.

மழை என்றாலும், வறட்சி என்றாலும் பொது மக்களை பாதுகாக்கின்ற காவல் தெய்வம் முதலமைச்சர் அம்மா தான். தமிழகத்திலே கனமழையினால் வௌ;ளம் என்ற உடனே அமைச்சர்களையும், அதிகாரிகளையும் அழைத்து சம்மந்தப்பட்ட இடங்களுக்கு நேரில் அனுப்பி நிவாரணப்பணிகளை உடனே மேற்கொண்டதன் பயனாக பெருமளவு வௌ;ளச்சேதம் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்கபட்டுள்ளது. மழைவௌ;ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உடனடியாக குடிசை மாற்று வாரியத்தின் மூலம் அதிகம் பாதிப்படைந்த மக்களுக்கு உடனடியாக வீடுகள் வழங்கப்பட உள்ளது. மேலும் வீடுகளை இழந்த மக்களுக்கு இரண்டு லட்சம் நிரந்தர வீடுகள் கட்டுவதற்கும் பணிகள் நடைபெற உள்ளது.

விருதுநகர் மாவட்டம் கல்வியில் முதன்மை மாநிலமாக மாற்ற பாடுபட்ட சிறந்த தலைமை ஆசிரியர்களுக்கு எங்களது நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். விலையில்லா மடிகணினிகளை பெற்ற் மாணவ, மாணவிகள் முதல்வர் ஜெயலலிதாவின் எண்ணம் ஈடேறும் வகையில் அவற்றை பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும் என செய்தி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் .அ.புகழேந்தி, விருதுநகர் மாவட்ட கல்வி அலுவலர் .ராமச்சந்திரன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் .எஸ்.ஜி.சுப்பிரமணியன், திருத்தங்கல் நகர்மன்ற தலைவர்.தனலட்சுமிகணேசன், துணைத்தலைவர்.பொன்சக்திவேல், சிவகாசி ஒன்றியக்குழுத் தலைவர்.சி.சுப்பிரமணியன், சிவகாசி நகர்மன்ற துணைத்தலைவர்.அசன்பதுருதீன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்.வி.ஆர்.கருப்பசாமி நார்மன்ற உறுபினர்கள் .மாணிக்கம், .கிருஷ்ணமூர்த்தி.மாரியப்பன்,.சினிவாசன், .காளிராஜ்,.கோவில்பிள்ளை உட்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பள்ளி தலைமையாசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.