மாணவ, மாணவிகளுக்காக எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாகமுதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நாடாளுமன்றத்தில் பாராட்டு

மாணவ, மாணவிகளுக்காக எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாகமுதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நாடாளுமன்றத்தில் பாராட்டு

திங்கள் , நவம்பர் 30,2015,

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதால், சமுதாய ரீதியில் மாணவ, மாணவிகள் அதிக அதிகாரம் பெற வழி வகை ஏற்படும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுபோன்ற திட்டங்களை நாடு முழுவதும் செயல்படுத்துவது குறித்து, தேசிய கல்விக் கொள்கை தொடர்பான அமைச்சர்கள் குழுவின் பரிந்துரைப்படி மத்திய அரசு செயல்படும் என்று மக்களவையில் அவர் தெரிவித்தார்.

முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு, மாணவ, மாணவிகளுக்காக எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், அவற்றில் ஒன்றுதான் மடிக்கணினி வழங்கும் திட்டம் என்று தெரிவித்து, இத்தகைய திட்டம் தேசிய கல்விக் கொள்கையில் இடம் பெறுமா? என நாடாளுமன்ற மக்களவையில் இன்று, திருப்பூர் தொகுதி அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர் திருமதி V.சத்தியபாமா கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி. ஸ்மிருதி இரானி, மக்களுக்கு, குறிப்பாக மாணவ, மாணவிகளின் நலனுக்காக தமிழக அரசு செயல்படுத்தி வரும் இதுபோன்ற திட்டங்களை பாராட்டுவதாகத் தெரிவித்தார்.

மேலும், தேசிய கல்விக் கொள்கை தொடர்பான மத்திய அமைச்சர்களின் குழு அளிக்கும் பரிந்துரைப்படி, மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.