முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி

புதன், ஜனவரி 20,2016,

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதால் மகிழ்ச்சியடைந்துள்ள விவசாயிகள், முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் 75 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறப்பதற்கான நடவடிக்கைகளில், கூட்டுறவுத்துறை முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. தற்போது, மாவட்டம் முழுவதும் அறுவடைப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், முதற்கட்டமாக, முதுகுளத்தூர் வட்டத்தில் உள்ள செல்வநாயகபுரம், முதுகுளத்தூர், சாம்பக்குளம் ஆகிய இடங்களில் நேரடி நெல்கொள் முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு நேரடி நெல் கொள்முதல் பணியை அமைச்சர் டாக்டர் S. சுந்தரராஜ் தொடங்கி வைத்தார். இடைத்தரகர்கள் இன்றி, நெல்லை நேரடியாக விற்பனை செய்ய தங்கள் பகுதியிலேயே நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க உத்தரவிட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.