மாநிலம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணி தீவிரம்: பயனாளிகள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, மனமார்ந்த நன்றி

மாநிலம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் பணி தீவிரம்: பயனாளிகள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, மனமார்ந்த நன்றி

புதன், டிசம்பர் 30,2015,

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில் மாநிலம் முழுவதும் பயனாளிகளுக்கு விலையில்லா நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.

நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பாளையங்கோட்டை, புதுப்பேட்டை பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறிகள் வழங்கப்பட்டன. கழக மாநிலங்களவை குழு துணைத் தலைவர் திரு. S. முத்துக்கருப்பன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர் மாவட்டம் கீழக்கணவாய் என்ற இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசு பாலிடெக்னிக் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு தொழில்நுட்ப கல்லூரி மாணவ-மாணவிகள் 252 பேருக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட செங்கப்படை கிராமத்தில் மகளிருக்கு விலையில்லா வெள்ளாடுகள் வழங்கப்பட்டன.

விழுப்புரம் மாவட்டத்தில் ஆயிரத்து 682 பேருக்கும் – ஓசூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 6,800 பேருக்கும் – புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ஆயிரத்து 200 பயனாளிகளுக்கும் விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின்விறிசிகளும் வழங்கப்பட்டன.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் 265 மகளிருக்கு திருமண நிதியுதவித் திட்டத்தின்கீழ், சுமார் ஒருகோடியே 26 லட்சத்து 93 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நிதியுதவி மற்றும் தாலிக்குத் தங்கம் வழங்கப்பட்டது.

நாகர்கோவிலில், ஆயிரத்து 28 பயனாளிகளுக்கு 2 கோடியே 57 லட்சம் ரூபாய் அளவிலான திருமண நிதியுதவி மற்றும் 10 கோடி ரூபாய் மதிப்பிலான தாலிக்குத் தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நலத்திட்ட உதவிகளைப் பெற்றுக் கொண்ட பயனாளிகள், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, மனமார்ந்த நன்றி தெரிவித்தனர்.