மாநிலம் முழுவதும் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில் நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன

மாநிலம் முழுவதும் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில்  நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன

திங்கள் , பெப்ரவரி 08,2016,

சேலம் மாவட்டத்தில், தம்மம்பட்டி பேரூராட்சி பகுதிகளைச் சேர்ந்த 6 ஆயிரத்து 390 பயனாளிகளுக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின்விசிறிகளை அமைச்சர் திரு. எடப்பாடி கே.பழனிசாமி வழங்கினார். இதில், கழக நாடாளுமன்ற உறுப்பினர் திரு. காமராஜ் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

தருமபுரி மாவட்டம் தென்கரைக்கோட்டையைச் சேர்ந்த 105 பயனாளிகளுக்கு 13 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான விலையில்லா செம்மறி ஆடுகள் மற்றும் வெள்ளாடுகளை அமைச்சர் திரு. பி. பழனியப்பன் வழங்கினார்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருப்பட்டூர் மற்றும் பூவாளுர் கிராமத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், 406 பயனாளிகளுக்கு 49 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ளாடுகளை அமைச்சர் திரு. டி.பி.பூனாட்சி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு. டி.ரத்தினவேல், திரு. ஆர்.பி.மருதராஜா மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர். தங்களின் பொருளாதாரம் மேம்பாட சிறப்பு திட்டத்தை அறிவித்த முதலமைச்சர்  ஜெயலலிதாவுக்கு பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர்.