மின்சாரம் தாக்கி உயிரிழந்த 20 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

மின்சாரம் தாக்கி உயிரிழந்த 20 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

திங்கட்கிழமை, பிப்ரவரி 29, 2016,

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 20 பேர் குடும்பங்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் வீதம் 60 லட்சம் ரூபாய் வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர்  ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22-ம் தேதி விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டம், சிங்கம்மாள்புரம் கிராமத்தைச் சேர்ந்த திரு. இருளாண்டி என்பவரின் மகன் E.M.குருசாமி;

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 25-ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம், சோழிங்கநல்லூர் வட்டம், பெரிய கோவிலம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த திரு. கன்னியப்பன் என்பவரின் மகன் சதீஷ்குமார்;

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27-ம் தேதி விருதுநகர் மாவட்டம், திருச்சுழியூர் வட்டம், மதிலை குளம் கிராமத்தைச் சேர்ந்த திரு. முத்துச்செல்வம்;

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம், கன்னாரக்குடி கிராமத்தைச் சேர்ந்த திரு ராஜ்கண்ணு என்பவரின் மனைவி மலர்கொடி;

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 28-ம் தேதி கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், தொழுதூர் கிராமத்தைச் சேர்ந்த திரு. நாச்சியன் என்பவரின் மகன் செல்வராஜ்;

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2-ம் தேதி திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், முரிச்சம்பேடு கிராமத்தைச் சேர்ந்த திரு. குப்பன் என்பவரின் மகன் சுப்பிரமணி;

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5-ம் தேதி திருநெல்வேலி மாவட்டம், கடையநல்லூர் வட்டம், நத்தகர் பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்த திரு. செய்யது அப்துல்காதர் என்பவரின் மகன் முகமது சித்திக்;

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30-ம் தேதி வேலூர் மாவட்டம், ஆற்காடு வட்டம், வேம்பி கிராமத்தைச் சேர்ந்த திரு. ஏழுமலை என்பவரின் மகள் ரம்யா;

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12-ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் வட்டம், பொறையூர் கிராமத்தைச் சேர்ந்த திரு. தாஸ் என்பவரின் மகன் ராஜா; மதுராந்தகம் வட்டம், காந்தி நகரைச் சேர்ந்த திரு. சேகர் என்பவரின் மகன் அபி அரவிந்தன்;

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 13-ம் தேதி மதுரை மாவட்டம், திருமங்கலம் வட்டம், திருமால் கிராமத்தைச் சேர்ந்த திரு. ஆறுமுகம் என்பவரின் மகன் முருகன்;

கடந்த மாதம் 4-ம் தேதி தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், உம்பளபாடி கிராமத்தைச் சேர்ந்த திரு. கலியபெருமாள் என்பவரின் மகன் ஞானசேகரன்;

கடந்த மாதம் 9-ம் தேதி விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், நரசிங்கராயன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த திரு. முனுசாமி என்பவரின் மகன் இருசப்பன்;

கடந்த மாதம் 13-ம் தேதி நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் பிரிவு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் ஒப்பந்த தொழிலாளராகப் பணி புரிந்து வந்த திரு. மனோகரன்;

கடந்த மாதம் 14-ம் தேதி கடலூர் மாவட்டம், விருதாச்சலம் வட்டம் கார்குடல் கிராமத்தைச் சேர்ந்த திரு. ராமசாமி என்பவரின் மகன் ஆறுமுகம்;

கடந்த மாதம் 15-ம் தேதி அரியலூர் மாவட்டம், திருவெங்கனூர் கிராமத்தைச் சேர்ந்த திரு. ரவிச்சந்திரன் என்பவரின் மகன் பிரசாந்த்;

திருவண்ணாமலை மாவட்டம், பொன்னங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த திரு. சுப்பிரமணி என்பவரின் மகன் கிருஷ்ணமூர்த்தி;

கடந்த மாதம் 22-ம் தேதி திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், நல்லமனார்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த திரு. சின்னையா என்பவரின் மனைவி முத்தம்மாள்;

கடந்த மாதம் 25-ம் தேதி வேலூர் மாவட்டம், அரக்கோணம் வட்டம், சூரை கிராமத்தைச் சேர்ந்த திரு. நல்லையன் என்பவரின் மகன் ஆறுமுகம்;

கடந்த மாதம் 28-ம் தேதி திருவண்ணாமலை மாவட்டம், அணுக்குமலை கிராமத்தைச் சேர்ந்த திரு. ஆறுமுகம் என்பவரின் மனைவி வசந்தா;

ஆகியோர் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து தாம் மிகவும் துயரம் அடைந்ததாகத் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த 20 நபர்களின் குடும்பங்களுக்கும் தமது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.