மின்சாரம் தாக்கி உயிரிழந்த 10 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

மின்சாரம் தாக்கி உயிரிழந்த 10 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி : முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, மார்ச் 03, 2017,

சென்னை : தமிழகம் முழுவதும் மின்சாரம் தாக்கி உயிரிழந்த 10 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 3 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வேலூர் மாவட்டம், ஆலங்கனேரி கிராமத்தைச் சேர்ந்த செல்வன்.மைதீஷ்குமார்; கன்னியாகுமரி மாவட்டம், சுருளகோடு கிராமத்தைச் சேர்ந்த திரு. அய்யாதுரை, திருமதி மேரி; திற்பரப்பு கிராமத்தைச் சேர்ந்த திரு ராஜன்; வடசேரி கிழக்கு கிராமத்தைச் சேர்ந்த திரு சரவணன்; திருநெல்வேலி மாவட்டம், இட்டமொழியைச் சேர்ந்த திருமதி. சண்முகக்கனி; திருச்சிராப்பள்ளி மாவட்டம், காரைப்பட்டி கிராமத்தில், டிரான்ஸ்பார்மரை பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த திரு.செல்வம்; வேலூர் மாவட்டம், மாடுபட்டி கிராமத்தைச் சேர்ந்த திரு.சக்கரபாணி; மதுரை மாவட்டம், பழங்காநத்தம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த திரு. பால்பாண்டி; திருநெல்வேலி மாவட்டம், காரிசாத்தான் கிராமத்தைச் சேர்ந்த திருமதி. பரமேஸ்வரி ஆகியோர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து மிகவும் துயரம் அடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

மின்சாரம் தாக்கி உயிரிழந்த 10 நபர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 3 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.