மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த அ.இ.அ.தி.மு.க. தொண்டர் பழனிச்சாமி குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிதி உதவி:முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த அ.இ.அ.தி.மு.க. தொண்டர் பழனிச்சாமி குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிதி உதவி:முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

திங்கட்கிழமை, ஜனவரி 18, 2016,

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அ.இ.அ.தி.மு.க. தொண்டர் திரு. பழனிச்சாமி, கழகப் பணியின் போது எதிர்பாராமல் மின்சாரம் தாக்கி மரணமடைந்தது குறித்து, முதலமைச்சர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். திரு பழனிச்சாமியின் குடும்பத்திற்கு, குடும்பநல நிதியுதவியாக மூன்று லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக,அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முதலமைச்சருமான செல்வி ஜெ ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கரூர் மாவட்டம், கரூர் நகர 14-ஆவது வார்டைச் சேர்ந்த அப்பு (எ) பழனிச்சாமி, எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து மரணடைந்துவிட்டார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், அவரது குடும்பத்துக்கு அதிமுக சார்பில் குடும்ப நல நிதியுதவியாக ரூ. 3 லட்சம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.