மிஸ்டர் ஸ்டாலின்…. நீங்கள் செய்த இமாலய ஊழலை மன்னிப்பதா?’: நிர்மலா பெரியசாமி கேள்வி

மிஸ்டர் ஸ்டாலின்…. நீங்கள் செய்த இமாலய ஊழலை மன்னிப்பதா?’: நிர்மலா பெரியசாமி கேள்வி

வெள்ளி, பெப்ரவரி 26,2016,

“ஸ்டாலின்,  ‘என்னை மன்னிச்சிடுங்க…!’ என மன்னிப்பு கேட்டுக்கொண்டு அலைகிறார். மிஸ்டர் ஸ்டாலின்… எதை மன்னிப்பது. நீங்கள் செய்த இமாலய ஊழலை மன்னிப்பதா?” என்று அதிமுக தலைமை கழக பேச்சாளர் நிர்மலா பெரியசாமி சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

திருச்சி எடத்தெரு கீழப்புதூரில் திருச்சி ஏர்போர்ட் பகுதி கழகம் நேற்றிரவு நடைபெற்ற முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக தலைமை கழக பேச்சாளர் நிர்மலா பெரியசாமி, “இந்த கலைஞர் பாமகவை வளர்த்துவிட்டார். அம்மா அப்படியே உட்கார வைத்தார்கள். தற்போது தமிழகத்தில் முதல்வர் தான்தான் என ஆளாளுக்கு சொல்லிக்கிட்டு அலைகிறார்கள். குறிப்பாக ஸ்டாலின் மன்னிச்சிடுங்க என மன்னிப்பு கேட்டுக்கொண்டு அலைகிறார். மிஸ்டர் ஸ்டாலின் எதை மன்னிப்பது. நீங்கள் செய்த இமாலய ஊழலை மன்னிப்பதா, அடுத்து நீதிக்கேட்டு பேரணி நடத்துகிறாராம் ஸ்டாலின், மிஸ்டர் ஸ்டாலின் அம்மா உத்தரவிட்டால் அதிமுகவின் மகளிர் அணி சார்பாக நீதிகேட்டு நாங்கள் பேரணி நடத்துகிறோம். உங்கள் நண்பர் அண்ணாநகர் ரமேஷ் தனது குடும்பத்தாரோடு இறந்துகிடந்தாரே அது குறித்து நீதி கேட்டு பேரணி நடத்துவோம்.  அப்பிராணியாக இருந்து பணம் சம்பாதிக்கும் ஆசையில் கூடா நட்பு சேர்ந்ததால்  இறந்துபோனாரே சாதிக் பாட்சா. அவர் சாவுக்கு நீதி வேண்டும் மிஸ்டர் ஸ்டாலின், தமிழ்நாட்டின் மிகச்சிறந்த அமைச்சராக விளங்கிய தா.கிருட்டிணன் கொலைக்கு காரணமானவர்களுக்கு பதவி வழங்கினீர்களே அதற்கு நீதி வேண்டும். சபரீசன் போதை மருந்து பிரச்னையில் சிக்கினாரே, உதயநிதி கார் இறக்குமதி செய்ததில் ஊழலில் சிக்கினாரே அதற்கு நீதி கேட்கிறோம் மிஸ்டர் ஸ்டாலின்.

தமிழனை தலைகுப்புற செய்ய வைத்த 2ஜி வழக்கில் திகாரில் அடைக்கப்பட்டாரே கனிமொழி அதற்கு நீதி வேண்டும் ஸ்டாலின். இப்படி நாங்கள் நீதி கேட்டால் என்னவாகும் என யோசித்து பாருங்கள் மிஸ்டர் ஸ்டாலின். இதையெல்லாம்  எப்படி மன்னிக்க முடியும் மிஸ்டர் ஸ்டாலின். உங்க கட்சியெல்லாம் ஒரு கட்சி பேச வந்துட்டீங்க. திமுக ஒரு குடும்ப கட்சி, கருணாநிதி குடும்பம் மட்டும்தான் அவர்களுக்கு முக்கியம். அண்ணா உருவாக்கிய திமுக, இப்போது ககுமுக (கருணாநிதி குடும்பம் முன்னேற்ற கட்சி)வாக மாறிவிட்டது.  ஆனால் அதிமுக பல்லாயிரக்கணக்கான தொண்டர்களை உள்ளடக்கிய குடும்பம். அம்மா மட்டும் எங்கள் தாய். அப்படிப்பட்டவரை தலைவராக கொண்ட கட்சி எங்கள் இயக்கம். நல்லவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் மழை அதிகம் வரும். அதனால்தான் 100 வருடங்கள் இல்லாத மழை கொட்டி தீர்த்தது. அந்த மழையில் அம்மா மிக சிறப்பாக செயல்பட்டு, வெள்ள சேதத்தை தடுக்க வழி செய்தார். 

செம்பரம்பாக்கம் ஏரியை அன்று திறந்துவிடவில்லை என்றால் பல்லாயிரக்கணக்கானோர் பலியாகி சேதம் அதிகம் ஆகியிருக்கும். அதை தடுத்தவர் அம்மா, ஆனால் சபரீசன் கம்பெனி, வதந்திகளை பரப்பி விட்டார்கள். அதையெல்லாம் மக்கள் முறியடித்து அம்மாவின் பக்கம் நிற்கிறார்கள். வெள்ள பாதிப்புக்காக 1 கோடி கொடுத்த திமுக என்னம்மா இப்படி பண்ணுறீங்களேம்மா என்கிற விளம்பரத்திற்கு ஒரு நாளைக்கு 18 கோடி செலவழிக்கிறார்கள். இவர்களுக்கு தோல்வி முகம் தெரிகிறது. அம்மா அவர்கள், அரசியல்வாதியில்லை ஸ்டேட்ஸ்மென், பல்லாயிரக்கணக்கானவர்களில் ஒருவர். இங்கிலாந்தின் வின்ஸ்ன்ட் சர்ச்சில், அமெரிக்காவின் ஆபிரகாம் லிங்கன், ரூஸ்வெல்ட், நேரு வரிசையில் உருவாகியிருக்கும் ஸ்டேட்ஸ்மென் நம் அம்மா, அதற்காக அவர்பட்ட துன்பங்கள் ஏராளம். அவற்றை எல்லாம் தவிடு பொடியாக்கியவர் அம்மா மட்டுமே” என்று கூறினார்.தமிழகத்தை காக்க சபதம் ஏற்போம். பண்ருட்டியார் சொன்னாரே, தமிழகத்தில் முதல்வர் பதவி வேக்கன்சி இல்லைன்னு, அப்படித்தான் எங்கம்மா இருக்க, எப்படி உங்களால் முதல்வராக முடியும். எங்கம்மாதான் தமிழகத்தின் நிரந்தர முதல்வர்” என முடித்தார்.