மீஞ்சூர் அருகே தி.மு.க. வினர் வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்ட 2 ஆயிரம் மதுபாட்டில்கள் பறிமுதல்

மீஞ்சூர் அருகே தி.மு.க. வினர் வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்ட 2 ஆயிரம் மதுபாட்டில்கள் பறிமுதல்

திங்கள் , மே 02,2016,

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக தி.மு.க. வினர் வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான 2 ஆயிரம் மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

பொன்னேரியை அடுத்த மீஞ்சூர் பட்டமந்திரி பகுதியில் தி.மு.க.பிரமுகர்களின் வீடுகளில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக ஏராளமான மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, மீஞ்சூர் காவல்துறையினர் தி.மு.க. பிரமுகர்கள் ஜீவா மற்றும் அவரது உறவினர் சுரேஷ் ஆகியோர் வீடுகளில் சோதனையிட்ட போது வாக்காளர்களக்கு கொடுக்க சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 2 ஆயிரம் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களின் மதிப்பு 3 லட்சம் ரூபாய் என்றும் போலீசார் தெரிவித்தனர். மேலும், இதுபோன்று மதுபான பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.