மீட்புப் பணிகளில் ராணுவத்தினருக்கு மிகச்சிறப்பான முறையில் ஒத்துழைப்பு:தமிழக அரசுக்கு ராணுவ அதிகாரி ஜக்பீர்சிங் பாராட்டு!

மீட்புப் பணிகளில் ராணுவத்தினருக்கு மிகச்சிறப்பான முறையில் ஒத்துழைப்பு:தமிழக அரசுக்கு ராணுவ அதிகாரி ஜக்பீர்சிங் பாராட்டு!

வியாழக்கிழமை, டிசம்பர் 17, 2015,

மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், நடைபெற்ற மீட்புப் பணிகளின் போது, ராணுவத்தினருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு மிகச்சிறப்பான முறையில், ஒத்துழைப்பு அளித்ததாக லெப்டினன்ட் ஜெனரல் ஜக்பீர்சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சென்னையில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தின்போது, தாம்பரம், முடிச்சசூர், வேளச்சேரி, வளசரவாக்கம், கோட்டூர்புரம், மடிப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், இந்திய ராணுவத்தினர் மிகச்சிறப்பாக மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். முதலமைச்சர்  ஜெயலலிதா சமூக வலைதளத்தில் வெளியிட்ட உரையிலும் ராணுவத்தினரை பாராட்டியிருந்தார். இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய, பேரிடர் மீட்புப் பணி குழுவின் தலைவர், லெப்டினன்ட் ஜெனரல் ஜக்பீர் சிங், ராணுவத்தைச் சேர்ந்த முப்படையினரும் சென்னையில் மீட்புப் பணிகளில் மிகச்சிறப்பாக ஈடுபட்டதாகத் தெரிவித்தார். இப்பணிகளின் போது, தமிழக அரசும், அதிகாரிகளும், ராணுவத்தினருக்கு மிகச்சிறப்பான முறையில் ஆதரவளித்ததாகவும், முழு ஒத்துழைப்பு வழங்கியதாகவும் பாராட்டு தெரிவித்துள்ளார்.