முதலமைச்சரின் உத்தரவின்படி, நடத்தப்பட்ட தட்டம்மை தடுப்பூசி முகாம்களில், இதுவரை 1 லட்சத்து 41 ஆயிரத்து 470 பேர் பயனடைந்துள்ளனர்

முதலமைச்சரின் உத்தரவின்படி, நடத்தப்பட்ட தட்டம்மை தடுப்பூசி முகாம்களில், இதுவரை 1 லட்சத்து 41 ஆயிரத்து 470 பேர் பயனடைந்துள்ளனர்

புதன்கிழமை, டிசம்பர் 16, 2015,

முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவின்படி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், தூத்துக்குடி மாவட்டங்களில் நடத்தப்பட்ட தட்டம்மை தடுப்பூசி முகாம்களில், இதுவரை 1 லட்சத்து 41 ஆயிரத்து 470 பேர் பயனடைந்துள்ளனர்.

மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள 9 மாத குழந்தைகள் முதல் 15 வயதுக்குள்பட்ட சிறார்கள் வரையில் தட்டம்மை தடுப்பூசி அளிக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, டிசம்பர் 11 முதல் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 1,41,470 குழந்தைகள் பயனடைந்துள்ளனர். இந்த நிலையில், தூத்துக்குடி, கடலூர் மாவட்டங்களிலும் தட்டம்மை தடுப்பூசி அளிக்கும் முகாம்கள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் 7.65 லட்சம் குழந்தைகளுக்குத் தடுப்பூசி வழங்கபட்டது

இலக்கை அடையும் வரை முகாம்கள் தொடர்ந்து நடைபெறும் என்று சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.