முதலமைச்சரின் உத்தரவின் பேரில்,திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட தடுப்பணை நிரம்பியது: :விவசாயிகள் முதலமைச்சருக்கு நன்றி

முதலமைச்சரின் உத்தரவின் பேரில்,திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட தடுப்பணை நிரம்பியது: :விவசாயிகள் முதலமைச்சருக்கு நன்றி

வியாழக்கிழமை, டிசம்பர் 17, 2015,

திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு அருகே, முதலமைச்சர்  ஜெயலலிதா ஆணைக்கிணங்க, சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை தற்போது நிரம்பியிருப்பதால், அப்பகுதி மக்கள் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். அண்மையில் பெய்த கனமழையினால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் விவசாயத்திற்குப் பயன்படும் நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.

திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு பேரூராட்சிக்கு உட்பட்ட விட்டல்நாயக்கன் பட்டியில் குடகனாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்காக, முதலமைச்சர்  ஜெயலலிதா, 6 கோடியே 80 லட்சம் ரூபாய் நிதியுதவி செய்தார். அண்மையில் பெய்த தொடர் மழையினால், இந்தத் தடுப்பணை நிரம்பியதையடுத்து, அழகாபுரி அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மகிழ்ச்சியடைந்துள்ள அப்பகுதி விவசாயிகள், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தங்களது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதியில், 400 ஏக்கர் பரப்பளவு உள்ள பேரூர் ஏரி நிரம்பியதையடுத்து, ஏரியின் கரைகளை அமைச்சர் திரு. T.P. பூனாட்சி, பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் பார்வையிட்டார். இதனைத்தொடர்ந்து, ஏரியிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

இதனிடையே, சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே வலசக்கல்பட்டி ஏரியில், 4 ஆண்டுகளுக்குப் பிறகு தண்ணீர் நிரம்பியிருப்பதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது பெய்த கனமழையினால் அணைகளில் தண்ணீர் நிரம்பியுள்ளதால், அத்திமரப்பட்டி உள்ளிட்ட இடங்களில் விவசாயிகள் நெல் நடவுப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தில், பெய்துள்ள தொடர் மழையினால் பெரும்பாலான ஏரிகள் நிரம்பியுள்ளன. கீழபழூர், சாத்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில் கட்டப்பட்டுள்ள 13 தடுப்பணைகள் நிரம்பியுள்ளதையடுத்து, அப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.