முதலமைச்சரின் பிறந்தநாளை முன்னிட்டு, நாளை திருமணம் நடைபெறவுள்ள 68 ஜோடிகளுக்கு பட்டு வேட்டிகள்- பட்டுப்புடவைகள் வழங்கப்பட்டன

முதலமைச்சரின் பிறந்தநாளை முன்னிட்டு, நாளை திருமணம் நடைபெறவுள்ள 68  ஜோடிகளுக்கு பட்டு வேட்டிகள்- பட்டுப்புடவைகள் வழங்கப்பட்டன

வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 19, 2016,

முதலமைச்சர் ஜெயலலிதாவின் 68-வது பிறந்தநாளை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மாவட்ட அ.இ.அ.தி.மு.க சார்பில் வரும் 21ம் தேதி 68 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெறவுள்ள நிலையில், மணமகன்களுக்கான பட்டு வேட்டிகளும், மணமகள்களுக்கான முகூர்த்த பட்டுப்புடவைகளும் வழங்கப்பட்டன. 

அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான  ஜெயலலிதாவின் 68-வது பிறந்த நாளை முன்னிட்டு, கழகத்தின் பல்வேறு அமைப்புகளும் சிறப்பு நிகழ்ச்சியை நடத்தி வருகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டக் கழகம் சார்பில், வரும் 21ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, கிருஷ்ணகிரி கார்நேசன் மைதானத்தில் 68 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்படவுள்ளது. இதையொட்டி, மணமகன் மற்றும் மணமகள்களுக்கு பட்டு வேட்டியும், பட்டுப்புடவைகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், இருவீட்டாரின் பெற்றோர்களும், ஏராளமான கழக நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.