முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ்,இரண்டு சிறுவர்களுக்கு கல்லீரலில் உருவான புற்றுநோய் கட்டியை வெற்றிகரமாக அகற்றி மருத்துவர்கள் சாதனை:பெற்றோர்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு மனமார்ந்த நன்றி

முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ்,இரண்டு சிறுவர்களுக்கு கல்லீரலில் உருவான புற்றுநோய் கட்டியை வெற்றிகரமாக அகற்றி மருத்துவர்கள் சாதனை:பெற்றோர்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு மனமார்ந்த நன்றி

செவ்வாய், ஜனவரி 19,2016,

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் இரண்டு சிறுவர்களுக்கு கல்லீரலில் உருவான புற்றுநோய் கட்டியை வெற்றிகரமாக அகற்றி மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.தற்போது இச்சிறுவர்கள் நோய் நீங்கி உற்சாகமாக இருக்கின்றனர்.இதனால் மகிழ்ச்சி அடைந்த சிறுவர்களின் பெற்றோர்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.

வேலூர் மாவட்டம் ஆற்காட்டைச் சேர்ந்த அப்துல் ஹமீது என்ற மூன்றரை வயது சிறுவனும், புதுக்கோட்டையைச் சேர்ந்த கணேஷ்குமார் என்ற ஒன்றரை வயது சிறுவனும் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கல்லீரல் புற்றுநோய் காரணமாக அனுமதிக்கப்பட்டனர்.

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ், இச்சிறுவர்களுக்கு எந்த செலவும் இல்லாமல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, புற்றுநோய் கட்டிகள் வெற்றிகரமாக அகற்றப்பட்டன. தற்போது இச்சிறுவர்கள் நோய் நீங்கி உற்சாகமாக இருக்கின்றனர்.

ஆபத்தான கல்லீரல் அறுவைச் சிகிச்சைகள் குழந்தைகளுக்கு செய்வது என்பது அரிதாகும். முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் முற்றிலும் கட்டணமின்றி இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக மருத்துவமனையின் முதல்வர் டாக்டர். ஐசக் கிறிஸ்டியன் மோசஸ் தெரிவித்துள்ளார்.இதனால் மகிழ்ச்சி அடைந்த சிறுவர்களின் பெற்றோர்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டனர் .

இதைப்போன்ற அறுவைச் சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் செய்தால் 8 லட்சம் ரூபாய் வரை செலவாகும். இவ்வளவு செலவு பிடிக்கும் அறுவை சிகிச்சை, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் எந்த கட்டணமும் இல்லாமல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.